கோவையில் அர்பன் ஆராவின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடை அணிகலன்கள், நகைகள், வீட்டு அலங்கார பொருட்களுக்கான கண்காட்சி!!

கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள ஷாப்பிங் செய்யும் பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே புதிய அனுபவத்தை தரும் வகையில் இளம் தலைமுறையினர். முதன் முறையாக ஒருங்கிணைத்துள்ள அர்பன் ஆரா எனும் ஷாப்பிங் கண்காட்சி கோவை அவினாசி சாலையில் உள்ள அலெக்ஸாண்டர் குதிரையேற்ற பயிற்சி மைதானத்தில் துவங்கியது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

செப்டம்பர் 2 மற்றும் 3 என இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இதில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள், பரிசு பொருட்கள் உணவு வகைகள் என  நாற்பதுக்கும் மேற்பட்டஅரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அர்பன் ஆரா  கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர் கீர்த்தனா மோகன் தாஸ் தலைமையில் நடைபெற்ற கண்காட்சி துவக்க விழாவில், சிறப்பு விருந்தினர்களாக, கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப்,பிரபல ஒப்பனை கலைஞர் ஷைனி, பெண்களுக்கான, உடற்பயிற்சி ஆலோசகர் மற்றும் வல்லுனர் ஜெயா மகேஷ்  ஆகியோர் கலந்து கொண்டு கண்காட்சியை துவக்கி வைத்தனர்.

கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர் கீர்த்தனா மோகன் தாஸ்  கண்காட்சி குறித்து பேசுகையில், இங்கு ஷாப்பிங் செய்ய வருபவர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களுக்கான அரங்குகளும் இங்கு அமைக்கப் பட்டுள்ளதாகவும், மேலும் பெண்களுக்கான சாரீஸ், சுடிதார், அலங்கார ஆபரணங்கள், குழந்தைகளுக்கான கைவினை பொருட்கள், பிரபல கலைஞர்களால் உருவாக்கப்பட்ட ஹேண்ட் பேக்குகள், பிரத்யேக டிசைனில் உருவாக்கப்பட்ட காலணிகள் பெண்களுக்கான, ஜிமிக்கி கம்மல், வளையல், வெள்ளி அணிகலன்கள் போன்றவை இடம்பெற்றுள்ளன. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

குறிப்பாக இங்கு வரும் வாடிக்கையாளர்கள் பொருட்கள் வாங்குவது மட்டுமின்றி ஜாலியாக ஷாப்பிங் செய்யும் வகையில் ஸ்பிளாஸ் மற்றும் ரேஜ் அறைகள், லேசர் டெக் விளையாட்டுகள் போன்ற பொழுது போக்கு அம்சங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சனி ஞாயிறு என விடுமுறை  நாட்களில்  நடைபெற உள்ள இதில் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வாடிக்கையாளர்கள் வந்து பொருட்களை ஆர்வமுடன் வாங்கி செல்வது குறிப்பிடதக்கது.

-சீனி, போத்தனூர்.

Comments