கோவைபுதூர் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளி சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றியது!!

  -MMH

கோவைபுதூர் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளி சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றியது!!

   கோவையில் நடைபெற்ற தெற்கு குறுமையத்துக்கு உட்பட்ட பள்ளிகளுக்கான  விளையாட்டு போட்டியில் அனைத்து போட்டிகளிலும் அதிக புள்ளிகளை பெற்ற கோவைபுதூர் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளி சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றியது…

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

 பள்ளிக்கல்வித்துறை சார்பாக  குறுமைய அளவிலான விளையாட்டு போட்டிகள் கோவையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன.. இதன்,ஒரு பகுதியாக கோவை பாரதியார் பல்கலைகழக மைதானத்தில் தெற்கு குறு மையத்திற்கு உட்பட்ட பல ளிகளுக்கான தடகளம் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.சுமார் 32 பள்ளிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்ட இதில், மாணவ - மாணவியருக்கு 14, 17 மற்றும் 19 ஆகிய வயது பிரிவின் அடிப்படையில், போட்டிகள் நடைபெற்றது.தடகள போட்டிகளில்,

100 மீட்டர் துவங்கி  200, 400, 1500,3000,தூரங்கள் கொண்ட ஓட்டப்பந்தயம்,மற்றும்  குண்டு எறிதல், தடையோட்டம்,உயரம் மற்றும் நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல்,  உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

இதில் மாணவ,மாணவிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இரண்டு நாட்கள் நடைபெற்ற போட்டி முடிவுகளில் கோவை புதூர் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளி தடகள போட்டிகளில் மாணவர்கள் 66 புள்ளிகள் பெற்று முதலிடத்தையும்,அதே பள்ளியை சேர்ந்த மாணவிகள் 117 புள்ளிகள் பெற்று முதலிடத்தையும் பிடித்தனர்.அதே போல கால்பந்து,கைப்பந்து,இறகு பந்து உள்ளிட்ட  விளையாட்டுகளிலும் முதலிடம் பிடித்து சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளனர்.இதே போல இரண்டாம் இடத்தை ஈக்குவிடாஸ் பள்ளியும்,மூன்றாம் இடத்தை குணியமுத்தூர் நிர்மலா மாதா பள்ளியும் பிடித்தன.தொடர்ந்து நடைபெற்ற பரிசு வழங்கும் விழாவில்,சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற வெற்றி ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

-சீனி, போத்தனூர்.

Comments