ஹைதராபாதி உணவு திருவிழா!!


கோவை, ரேஸ்கோர்ஸில் உள்ள தாஜ் விவாந்தா ஓட்டலில், ஹைதராபாதி உணவு  திருவிழா துவங்கியுள்ளது செப்டம்பர் 22 ந்தேதி துவங்கி 10 நாட்கள் நடைபெற உள்ள இதில்,ஐம்பதுக்கும் மேற்பட்ட சைவ, அசைவ உணவு வகைகள் பரிமாறபடுகின்றன.

இந்திய உணவு வகைகளில் ஹைதராபாதி உணவு வகைகள் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் அனைவராலும் அதிகம் விரும்பும் உணவு வகைகளாக உள்ளது. இந்நிலையில் கோவையை சேர்ந்த உணவு பிரியர்களுக்காக, தாஜ் விவாந்தா ஓட்டலில் உள்ள லாட்டிடுயூட் ரெஸ்டாரெண்டில் ஹைதரபாதி உணவு திருவிழா துவங்கி உள்ளது. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

செப்டம்பர் 22 ந்தேதி துவங்கி அக்டோபர் 1 ந்தேதி வரை பத்து நாட்கள் நடைபெற உள்ள இந்த உணவு திருவிழா, ஹைதராபாத் தாஜ் கிருஷ்ணாவில் இருந்து பிரபல சமையல் கலை நிபுணர் பிலால் கான் வருகை தந்து, ஹைதரபாதி உணவுகளை சமைத்து தருகிறார். 

சைவ, அசைவ உணவு பிரியர்களை கவரும் விதமாக கபாப் இ பிர்தௌஸ், அஜ்வைனி மக்கி டிக்கா, பன்னீர் அக்தரி கபாப், தம் கா முர்கு, பிரபல ஹைதரபாத் மட்டன் பிரியாணி மற்றும் எல்லா நேரங்களில் விரும்பும் டபுள் கா மீத்தா, குபாணி கா மீத்தா என ஐம்பதுக்கும் மேற்பட்ட உணவு வகைகள் பரிமாற உள்ளதாக தாஜ் விவாந்தா ஓட்டலின் விற்பனை இயக்குனர் பிரேம் தெரிவித்தார்.

-சீனி, போத்தனூர்.

Comments