மாமன்னன் சுந்தரலிங்கம் நினைவு தினத்தைக் அவமதிக்கும் அரசியல் காட்சிகள்!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே மாமன்னன்  சுந்தரலிங்கம் நினைவு மணிமண்டபம் அமைந்துள்ளது. சுந்தரலிங்கம் இந்தியாவின் முதல் தற்கொலை படை வீரர், வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சுதந்திர  போராட்டத்தில் பக்கபலமாக இருந்துள்ளார். சுந்தரலிங்கம்  வீரமரணத்திற்கு அடுத்த நாள் நடைபெற்ற போரில் பாஞ்சாலங்குறிச்சி ஆங்கிலேயர் வசமானது இது வரலாறு. 

மாமன்னன் 224ஆவது நினைவு தினம் கடந்த வாரம் அனுசரிக்கப்பட்டது, இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 100 நேர் மட்டுமே  பங்கேற்றனர் , அதில் அரசு சார்பில், யூனியன் சேர்மன் தலைமையில்  மற்றும் சுந்திரலிங்கம் பேரவை தலைவர் முருகன் அவர்கள் சில அமைப்புகள் பேரவை மட்டுமே கலந்து கொண்டன.  

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

முக்கிய அரசியல் தலைவர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை . பல்வேறு பேரவை அமைப்புகள் தமிழ்நாடு முழவதும் இருந்தும் சுதந்திர போராட் வீரர்கள் சுந்தரலிங்கம் நினைவு தினத்தைக்  அவமதிக்கும் செயல் இந்த ஆண்டுகளில் நடைபெற்றது . அது மட்டுமல்லாது மாமன்னன் சுந்தரலிங்கம் நினைவு தினம் மற்றும் பிறந்த தினம்  அரசு விழா  கொண்டப்படுகிறது.

பீரங்கி மேடு என்று அழைக்கப்படும் மணல்மேடு சுந்தரலிங்க மணிமண்டபம் பராமரிக்க கூட ஆளில்லாமல், சுந்தரலிங்கம் மண்டபத்திற்கு மேற்கில் மூன்று  கல்லறைகள் உள்ளது கிணறுடன் சரியான பராமரிப்பின்றி அரசு நிலமும் உள்ளது. அரசு அறிவித்த சிலையும் இன்னும் அமைக்கப்படவில்லை.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.

Comments