கோவில்பட்டியில் பகத் சிங் பிறந்த நாள் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்றது!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவீரன் பகத்சிங்கின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது.

இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரரும் இந்திய விடுதலை இயக்கத்தில் ஒரு முக்கிய புரட்சியாளரும் ஆவார் செப்டம்பர் 28 ஆம் தேதி 1907‌ஆண்டு பிறந்தார். 

அனைந்திய  இளைஞர் பெருமன்றம் கோவில்பட்டி நகர குழு சார்பில் மாவீரன் பகத்சிங்கின் பிறந்த நாளை முன்னிட்டு இளைஞர் பெருமன்ற நகர செயலாளர் செந்தில் ஆறுமுகம் தலைமையில் இந்திய திருநாட்டை பாதுகாப்போம் என உறுதிமொழி ஏற்கப்பட்டது.

 பகத் சிங்   பல புரட்சி இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார்.  இந்துஸ்தான் குடியரசு அமைப்பு என்ற புரட்சி அமைப்பின் தலைவர்களில் ஒருவரானார். 63 நாட்கள் சிறைவாசத்தில் இருந்தபோது இந்தியக் கைதிகளுக்கு ஏனைய பிரித்தானியக் கைதிகளுடன் சம உரிமை பெறுவதற்காக உண்ணாநோன்பு இருந்ததில் இவரது செல்வாக்கு மக்களிடையே அதிகரித்தது.  

காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதி ராய் என்பவரின் இறப்புக்குக் காரணமாயிருந்த காவலதிகாரியைச் சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக பகத் சிங் 24வது அகவையில் தூக்கிலிடப்பட்டார். இந்நிகழ்வானது மேலும் பல இளைஞர்களை இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடவும் சோசலிசக் கொள்கைகள் இந்தியாவில் பரவவும் வழிவகுத்தது.  பகத் சிங் தூக்கில் இடுவதுற்கு முன் தன் தந்தைக்கு நான் ஏன் கடவுள் மறுப்பு கொண்டவனாக மாறினேன் என்பதை கடிதம் மூலம் தெரிவித்தார்.

இதில் மாவட்ட பொறுப்பாளர் சுரேஷ் தாலுகா செயலாளர் மணி நகர தலைவர் ரஞ்சனி கண்ணம்மா    மேலும் நகர செயலாளர் சரோஜா தாலுகா செயலாளர் பாபு விஜயலட்சுமி மாவட்ட குழு பரமராஜ் பாஞ்சாலி செயலாளர் குருசாமி பொருளாளர் ராஜு மற்றும் பல தோழர்கள் கலந்து  கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.

Comments