பசுவந்தனை அருகில் மின்சாரம் பாய்ந்து 4 செம்மறி ஆடுகள் பலி! விளாத்திகுளம் எம்எல்ஏ நேரில் நிதியுதவி வழங்கினார்.!!

 

-MMH

 பசுவந்தனை அருகில் மீனாட்சிபுரம் கிராமத்தில் அறுந்து கிடந்த மின்சார வயரில் நான்கு செம்மறி ஆடுகள் உரசியதில் மின்சாரம் பாய்ந்து இறப்பு. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்ட மன்ற தொகுதியில் பசுவந்தனை அருகில் மீனாட்சிபுரம் கிராமத்தில் சங்கர் வயது 29 தகப்பனார் பெயர் ஆறுமுக பாண்டியன் கிழக்கு தெரு சார்ந்த இவர் சுமார் 100க்கு மேற்பட்ட செம்மறி ஆடுகள் வைத்துள்ளார்.



இந்த நிலையில்  வட கிழக்கு பருவமழை காரணமாக இன்று காலை ஆடுகளை பட்டியலில்(கூடாரம் ) இருந்து வெளிவரும் போது மின்சார வயர் அறுந்து கிடந்தை கவனிக்கமால் எதிர்பாராத விதமாக மூன்று செம்மறி ஆடு மற்றும் ஒரு குட்டி வயரில் உரசியது. மின்சாரம் தாக்கியதில் நான்கு ஆடுகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது. 

பின்னர் தகவல் அறிந்த மின்சார ஊழியர்கள்  வயரை அகற்றி சரி செய்தனர். இந்த தகவல் அறிந்த விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் அவர்கள் நேரில் சென்று இறந்த ஆடுகளை பார்வையிட்டு தனது சொந்த நிதியிலிருந்து பத்தாயிரம்  நிதியுதவி வழங்கினார்கள் .மேலும் அரசின் சார்பில் நிதி கிடைக்கவும் ஏற்பாடு.  இந்நிகழ்வில் ஓட்டப்பிடாரம் ஒன்றிய துணைத் தலைவர் காசி விஸ்வநாதன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல்

எப்போதும் வென்றான் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார் ஒன்றிய குழு உறுப்பினர் வெள்ளைச்சாமி மாவட்ட பிரதிநிதிகள் சத்யராஜன்,தளவைராஜா தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நல அணி துணை அமைப்பாளர் முத்துராஜ் கிளைச் செயலாளர் சக்கையா சண்முகபுரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்கு ஓட்டப்பிடாரம் நிருபர்,

- முனியசாமி.

Comments