ராக்கிங்க்கு எதிரான சட்டம்- காவல்துறை சார்பில் எச்சரிக்கை!!!

கோவை மாநகர துணை காவல் ஆணையாளர் சந்தீஸிடம் தனியார் கல்லூரி மாணவர் ராக்கிங் செய்து தாக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், கோவையில் ஏராளமான கல்லூரி இருக்கிறது. இங்கு ராக்கிங் என்பது அதிகமாக இல்லை. 

ஓரிரு சம்பவத்தால் வழக்கு பதியப்பட்டு காவல்துறை விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் காவல்துறை சார்பில் எச்சரிக்கை செய்வதுடன் அறிவுரையும் வழங்கி வருகிறோம் என தெரிவித்தார். 

வழக்கு பதிவு செய்வதன் மூலம் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும் எனவும் ஒருவர் மீது வழக்கு பதிவாகிவிட்டால் அரசு வேலை மற்றும் தனியார் துறை வேலை வாய்ப்புகள் பெற தடையாக அமையும் என்பதால் கல்லூரி மாணவர்கள் இதுபோன்று ராக்கிங் சம்பவத்தில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக்கொண்டார். 

தமிழகத்தில் ராக்கிங்க்கு எதிரான சட்டம் கடுமையாக உள்ளதாகவும் எனவே இது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Comments