வால்பாறை தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 56 வழக்குகளில் 11 வழக்குகள் முடிக்கப்பட்டது!!

இந்திய உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நாடு முழுவதும் இன்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக வால்பாறை நீதிமன்றத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்திற்கு நீதிபதி திரு செந்தில்குமார் தலைமை தாங்கினாா். வழக்கறிஞர் விஸ்வநாதன் வரவேற்று பேசினார்.  

நீதிபதி செந்தில்குமார் மக்கள் நீதிமன்றத்தின் நன்மைகள் குறித்து நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை சமாதானமாக பேசி முடிக்கலாம், இதனால் சுமூகமான உறவுகள் மேம்படும், இங்கு முடிக்கப்படும் வழக்குகளை மேல்முறையீடு எதுவும் செய்ய முடியாது. கணவன், மனைவி குடும்ப பிரச்சினைகளை சுமூகமாக பேசி முடிப்பதால் குடும்பங்கள் சேர்ந்து வாழ வழிவகுக்கும். செக் மோசடி, பணம் கொடுக்கல், வாங்கல் வழக்குகளில் உடனடி தீர்வு காண முடியும். எனவே, பொதுமக்கள் மக்கள் நீதிமன்றத்தை அணுகி பயன்பெற வலியுறுத்தினார். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இன்று பல வருடங்களாக பிரிந்து வாழ்ந்த ஜீனத் நிஷா, நசீர் அகமது ஆகியோர் பேசி முடித்து சேர்த்து வைக்கப்பட்டனர். இதில் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் பெருமாள், பொருளாளர் முருகன், முத்துசாமி, சுமதி, சிவசுப்ரமணியன் சட்ட தன்னார்வ பணியாளர் சுரேஸ் காஞ்ச மலை முனியாண்டி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மக்கள் நீதிமன்றத்தில் செக் மோசடி வழக்குகளில் ரூ. 13,35,000/-மும், பணம் கொடுக்கல் வாங்கல் வழக்குகளில் ரூ. 3,52,195/- வசூலித்து தரப்பட்டது.  போலீஸ் வழக்குகளில் கள்ள சந்தையில் பிராந்தி விற்றது, பொது இடங்களில்  குடித்துவிட்டு தகராறு செய்தது போன்ற வழக்குகளில் ரூ. 9,500/- அபராதம்  விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது. மேலும் 56 வழக்குகள் விசாரணைக்கு  எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதில் 11 வழக்குகள் முடிக்கப்பட்டது. அதில் காஞ்ச மலை எஸ்டேட்டில்  சிறுத்தை கடித்து சுரேஷ் என்பவர் உயிரிழந்தார். இதை கண்டித்து மறியல்  செய்த 14 பேர்களுக்கு இரண்டு வழக்குகளில் இருந்து ரூபாய் 14,000 ரூபாய் அபதாரம் விதிக்கப்பட்டது. இன்று நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் வருகை தந்த அனைவரும் சந்தோசமாக சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-P.பரமுசிவம், வால்பாறை.

Comments