புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு வாக்கத்தான் நடைபெற்றது!!

கோவையில் வி.ஜி.மருத்துவமனை மற்றும் வி.ஜி.பாராமெடிக்கல் சயின்ஸ் கல்லூரி சார்பாக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு வாக்கத்தான் நடைபெற்றது…

கோவை துடியலூர் வி.ஜி.மருத்துவமனை சார்பாக தொடர்ந்து மருத்திவ முகாம்கள்,  விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்,என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக வி.ஜி.மருத்துவமனை மற்றும் வி.ஜி.பாராமெடிக்கல் சயின்ஸ் கல்லூரி சார்பாக, புற்றுநோய் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வாக்காத்தான் நடைபெற்றது..

கோவை ரேஸ்கோர்ஸ் ஐ.ஜி.அலுவலகம் முன்பாக துவங்கிய பேரணியை , கோவை  மாநகர காவல் துணை ஆணையர் சந்தீஷ் மற்றும் வி.ஜி.மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர்கள் மருத்துவர்கள் வெங்கடேஷ்,ஆஷா வெங்கடேஷ்,விஷ்ணு, வி.ஜி.பாராமெடிக்கல் கல்லூரி முதல்வர் ருக்மணி,மருத்துவமனையின் மனித வள மேம்பாட்டு அதிகாரி பிரசாந்த்  ஆகியோர் கலந்து கொண்டு  துவக்கி வைத்தனர். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதில் பேசிய காவல்துறை துணை ஆணையர் சந்தீஷ், ..தற்போது அதிக அளவில் ஏற்படும் புற்றுநோய் குறித்த பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்து அவசியமாக இருப்பதாக கூறிய அவர்,புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் அதனை எளிதில் குணப்படுத்தலாம் எனவும்,இது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், இந்த பேரணி நடைபெறுவதாக குறிப்பிட்டார்..  பேரணியில், மருத்துவமனை ஊழியர்கள்,செவிலியர்கள்,கல்லூரி  மாணவ மாணவிகள் என ஐநூறுக்கும் மேற்பட்டோர் விழிப்புணர்வு  பதாகைகள் ஏந்தியபடி ரேஸ்கோர்ஸ் பகுதியை சுற்றி நடந்து சென்றனர்.

-சீனி, போத்தனூர்.

Comments