கிறிஸ்துமஸ் விழாவை வரவேற்கும் விதமாக சி எஸ் ஐ கிறிஸ்து நாதர் ஆலயத்தில் மெழுகுவர்த்தி ஆராதனை நடைபெற்றது!!


கோவை: கிறிஸ்துமஸ் விழாவை வரவேற்கும் விதமாக கோவை திருச்சி சாலையில் உள்ள சி எஸ் ஐ கிறிஸ்து நாதர் ஆலயத்தில் மெழுகுவர்த்தி ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான சபையோர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இயேசு கிறிஸ்து பிறந்து தினமான டிசம்பர் 25-ந் தேதி ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக  உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இயேசுவின் பிறப்பை முன்னறிவிக்கும் வகையில்,பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை திருச்சி சாலையில் உள்ள சி எஸ் ஐ கிறிஸ்து நாதர் ஆலயத்தில் மெழுகுவர்த்தி ஆராதனை நிகழ்ச்சி நடைபெற்றது..இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கேரல் குழுவினர் இயேசு  கிறிஸ்துவின் புகழ் பாடினர். தொடர்ந்து ஆலயத்தில் சிறப்பு நிகழ்வாக சுமார் 500  மெழுகுவர்த்திகளில் ஒளி ஏற்றப்பட்டது. தொடர்ந்து கேரல்  இசை குழுவினர் இயேசு கிறிஸ்து பிறப்பை கொண்டாடும் வகையில் பாடல்களை பாடினர்.

முடிவில் கிறிஸ்தவர்கள் அனைவரும் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி பாடல் பாடினர். இந்த ஆராதனையில் சபையோர் திரளானோர்  கலந்துகொண்டனர்.இந்த நிகழ்வில் சிறப்பு செய்தியை  சுவிசேஷகர் ஜெ.டி.சி சேகர் வழங்கினார், நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும்


திருச்சபை தலைவர் ஆயர்  ராஜேந்திர குமார் மற்றும் ஆயர்கள் நெல்சன் சதீஷ்,  பிரவீன் ஜெபராஜ்,பொருளாளர் காட்வின் கோயில்,செயலாளர் பாக்கியசெல்வன்,மற்றும்  போதக சேகர உறுப்பினர்கள் பிரசாந்த், ஆடம் அப்பாதுரை, ஜெபகிங், ஸ்டீபன், விர்ஜினியா அருண், அதிசயராஜ், ஜெயக்குமார், சார்லஸ் ஜெயக்குமார், பியூலா சார்லி,திருமண்டல  பேரவை உறுப்பினர்கள் பரமானந்தம், ஜே.பி.ஜேக்கப், எஸ்.என் ஜேக்கப், ஜாஸ்மின், முத்துசெல்வன் ஆகியோர்  நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி திருச்சி சாலை கிறிஸ்து நாதர்  ஆலயம் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வண்ணமயமாக காட்சி அளித்தது குறிப்பிடத்தக்கது.

-சீனி, போத்தனூர்.

Comments