கிறிஸ்துமஸ் பாடல் பாடும் போட்டி 'சிங் ஃபார் ஜாய்' எனும் தலைப்பில் நடைபெற்றது!!


கோவையில் நடைபெற்ற  கிறிஸ்துமஸ் பாடல் பாடும் இறுதி போட்டியில் வண்ண உடை அணிந்த பள்ளி, கல்லூரி மற்றும் ஆலயங்களை சேர்ந்த கேரல் குழுவினர் அசத்தலாக பாடி தங்கள் திறமைகளை நிரூபித்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கோவையை சேர்ந்த விஸ்டீரியா க்ளோபல் என்ற நிறுவனம் சார்பாக  பள்ளி கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் தொடர்ந்து  பல்வேறு போட்டிகளை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை  வருவதை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான கிறிஸ்துமஸ் பாடல் பாடும் போட்டி சிங் ஃபார் ஜாய் எனும் தலைப்பில் ரெட்பீல்ட்ஸ் பகுதியில் உள்ள  நிர்மலா மகளிர் கல்லூரியில் கடந்த வாரம்  துவங்கியது.

கோவை, நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த  பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களை சேர்ந்த கேரல் குழுவினர் என நாற்பதுக்கும் மேற்பட்ட  கேரல் குழுவினர்  போட்டியில் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு வண்ணங்களில் ஆடை அணிந்த மாணவ, மாணவிகள் கிறிஸ்துமஸ் கேரல் பாடல்களை மேடையில்  பாடி அசத்தினர். மேற்கத்திய இசைக்கருவிகளான கீபோர்ட், டிரம்ஸ், கித்தார் உள்ளிட்ட வெவ்வேறு இசைக்கருவிகளை இசைத்தவாறு கிறிஸ்துமஸ் பாடல்களை பாடியதை பார்வையாளர்கள்  கைகளை தட்டி உற்சாகபடுத்தினர்.

விஸ்டீரியா க்ளோபல் நிறுவனத்தை சேர்ந்த ஷோபா சேஷல் ஒருங்கிணைத்த இந்த போட்டியில் நடுவர்களாக அகஸ்டின் பால்,சிட்டி பிரகாஷ் திரியம், ஃபெயித் ராக்லேண்ட்,ஷீபா சுரேஷ்,செஷில் கோட்டே,ஆகியோர் கலந்து கொண்டு சிறந்த கேரல் குழுவினரை தேர்வு செய்தனர். இதில் பள்ளி குழுவில் ஸ்டேன்ஸ் சி.பி.எஸ்.இ.பள்ளி  முதலிடமும்,கல்லூரி குழுவில் நிர்மலா கல்லூரி ஆலய குழுவினர் முதலிடமும்,ஆலயங்கள் குழுவில் சி.எஸ்.ஐ.ஆல் சோல்ஸ் ஜூனியர் குழுவினரும் வெற்றி பெற்றனர். இதனை தொடர்ந்து நடைபெற்ற பரிசு வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினர்களாக லீமா ரோஸ் மார்ட்டின், செல்லா ராகவேந்திரன்,சார்லஸ் ஃபேபியன்,விக்டர் டேனியல்,சாஜி மேத்யூ, நிதின்,அதிதி ராவ்,ஜே.ஆர்.டி.ராஜேந்திரன்,சி.கே.அருண்,ராஜராஜன்,விக்டர் ஜார்ஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறந்த கேரல் குழுவினருக்கு பரிசுகளை வழங்கி கவுரவித்தனர்.

-சீனி, போத்தனூர்.

Comments