உணவகங்களில் இருந்து வெளியேறும் கழிவு நீரை குடித்த மான் பரிதாப பலி!! வன உயிரியல் ஆர்வலர்கள் அதிர்ச்சி!!!

 

மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில் விலங்குகள் நடமாட்டம் அதிகளவில் இருந்து வருகிறது இந்த நிலையில் மேட்டுப்பாளையம் - குன்னூர் சாலையில் உள்ள தனியார் உணவகங்களில் இருந்து வெளியேற்றப்படும் சாக்கடை கழிவு நீர் தனியாக பைப் மூலம் வனப்பகுதிக்குள் விடப்படுகிறது. வனப்பகுதியில் சரியாக தண்ணீர் கிடைக்காத காரணத்தினால் வனவிலங்குகள் அருகில் உள்ள தண்ணீர் இருக்கும் இடம் தேடி வருகின்றன.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த நிலையில் தண்ணீர் தேடி வந்த மான் அந்தப் பகுதியில் தேங்கியிருந்த தண்ணீரை குடித்த நிலையில் உயிரிழந்துள்ளது. இதனைக் கண்டு வன உயிரியல் ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பின்னர் வனத்துறையினர் அங்கு தேங்கியுள்ள தண்ணீரை சோதனைக்காக ஆய்வகத்துக்கு எடுத்துச் சென்றனர். ஆய்வு முடிவுகள் வந்த பிறகுதான் மான் உயிரிழந்ததற்கான காரணம் தெரிய வரும்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன்.

Comments