சோலையார் டேம் பகுதியில் குளித்து மகிழ்ந்த காட்டு யானைகள்!! பொதுமக்களிடம் வனத்துறையின் வேண்டுகோள்!!!


 கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார வனபகுதியில் யானை, கரடி, புலி. சிறுத்தை, மான் உள்ளிட்ட வனவிலங்குகளும் அரிய வகை பறவைகளும் வசிக்கின்றன.இந்த வனவிலங்குகள் கடந்த சில நாட்களாக வனப்பகுதியை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதி மற்றும் எஸ்டேட் பகுதிகளில் உலா வருகிறது. தமிழக - கேரள எல்லை பகுதியான அதிரப்பள்ளி வனப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து குட்டிகளுடன் வந்த யானை கூட்டம் வால்பாறை பகுதியில் சுற்றித்திரிகிறது. இந்தநிலையில் அந்த யானைகள் வால்பாறை சோலையார் அணையில் குளித்து குதூகலம் அடைந்தன. அணையில் தற்போது தண்ணீர் குறைந்த அளவே இருப்பதால் யானை குட்டிகளும் குளிக்க ஏதுவாக இருந்தது. எனவே யானைகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தன.

சமீப காலங்களில் காட்டு யானைகள்  எஸ்டேட் பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும்  ரேஷன் கடைகளை சேதப்படுத்தி அங்குள்ள உணவுப் பொருட்களை எடுத்து சாப்பிட்டும் சூறையாடியும் வருகின்றன பொங்கல்  திருவிழாவை ஒட்டி ஸ்டேட் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் கரும்புகள் வாங்கி பொங்கல் வைத்து பூஜை செய்வதற்கும் அதன் பிறகு சாப்பிடவும் செய்திருப்பார்கள்  இதனால் யானைகள்   வர வாய்ப்புள்ளதாக வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல் வால்பாறை பகுதியில் உள்ள பொது மக்கள் கரும்புகளின் சக்கைகளை வீட்டிற்கு வெளியில் போட வேண்டாம் எனவும் வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் வராமல் இருக்க வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் தொடர்ந்து சுழற்சி முறையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வன விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். பொதுமக்களும் வலதுறையினருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். 

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன்.

Comments