தனியார் விடுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தா விட்டால் நடவடிக்கை...

 

கோவில்பாளையம், இன்போ தொழில்நுட்பக் கல்லுாரியில், தனியார் விடுதி, கல்லூரி விடுதி நிர்வாகிகள்,மாணவர்களுக்கு வாடகைக்கு வீடு கொடுத்துள்ளோர் ஆகியோருடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் பேசியதாவது தனியார் விடுதி, கல்லுாரி விடுதி நிர்வாகங்கள் மற்றும் வீடுகளை கல்லுாரி மாணவ, மாணவியருக்கு 

வாடகைக்கு கொடுத்துள்ளோர் கண்டிப்பாக தங்கள் விடுதி மற்றும் வீட்டு வளாகத்தில் கண்காணிப்பு கேமரா  பொருத்த வேண்டும். இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேலும் தங்கியுள்ள மாணவர்களின் ஆதார் மற்றும் அவர்களுடைய பெற்றோர் மொபைல் எண், முகவரி சான்று பெற்று வைத்திருக்க வேண்டும்.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,


மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தங்கள் விடுதிகளில் எவ்வளவு மாணவர்கள், எந்த கல்லுாரி மாணவர்கள் என்னும் விபரங்களை கோவில்பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு தெரிவிக்க வேண்டும். மேலும் சட்டவிரோத நடவடிக்கை குறித்தும், போதைப்பொருள் பயன்படுத்துவது குறித்தும் தெரிந்தால் 

உடனடியாக எங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். போதைப் பொருளுக்கு அடிமையாகியவர்கள் திருட்டு உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். அதை தடுக்க வேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளது. எனவே போலீசார் உடன் இணைந்து செயல்பட வேண்டும் என அவர் கூறினார்.

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Comments