சத்துணவு அங்கன்வாடி பெண்கள் தலைமையில் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்!!


தூத்துக்குடியில் சத்துணவு அங்கன்வாடி பெண்கள் தலைமையில் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

தூத்துக்குடி சிதம்பரம் நகர் பேருந்து  நிறுத்தம் முன்பு தமிழ்நாடு சத்துணவுத் அங்கன்வாடி கூட்டமைப்பு பெண்கள் தலைமையில் கருப்பு பேட்ஜ்  அணிவித்து  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

கடத்த சட்டமன்ற தேர்தல்  வாக்குறுதியை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு நிறைவேற்ற மற்றும் 3 அம்சங்கள் கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  


நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,


மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தொடர்ந்து தூத்துக்குடியில் சத்துணவு அங்கன்வாடி  கூட்டமைப்பிற்கு பேரணி  நடத்த அனுமதி மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு, அமைச்சர் எங்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் இல்லையெனில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக முழுவதும் எங்களது எதிர்ப்பு தேர்தலில் பிரதிபலிக்கும் 

கோரிக்கை: 

சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியருக்கு சிறப்பு பென்சன் ரூபாய் 6 ஆயிரத்து 750 அகவிலைப்படியுடன் வழங்கிட வேண்டும் அரசு துறை காலிப்பணியிடங்களை தகுதியுள்ள சத்துணவுத்  அங்கன்வாடி ஊழியர்களை பணிமூப்பு அடிப்படையில் ஈர்த்து முறையான  காலை முறை ஊதியம் வழங்கிட வேண்டும் காலை சிற்றுண்டி திட்டம் அமலாக்கத்தை சத்துணவு ஊழியர்களிடம்  வழங்கிட வேண்டும்.

இந்த  ஆர்ப்பாட்டத்தில் வைஜெயந்தி மாலா கனகவேல் ஆதிலட்சுமி  அரசம்மாள் இரத்தினாவதி  கலைச் செல்வி எபிடேசர் டேனியல் ஜெயலட்சுமி  அய்யாக்குட்டி சுப்பையா பலவேசம்  மற்றும் ஜெக வீரபாண்டிய கட்டபொம்மன் உட்பட்ட  நூற்றுக்கு  மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர் 

-முனியசாமி.

Comments