முறைகேட்டில் ஈடுபட்ட தர்மலிங்கேஸ்வரர் கோவில் வாழ்நாள் அறங்காவலர் உள்ளிட்ட இருவர் பணியிடை நீக்கம்!!


இந்து சமய அறநிலைய துறை உத்தரவிட்டுள்ள நிலையில் கோவிலுக்கு சொந்தமான ரூ.125 கோடி மதிப்பிளான நிலம் கண்டறியப்பட்டுள்ளது.  கோவை மதுக்கரை மரப்பாலம் பகுதியில் உள்ள தர்மலிங்கேஷ்வரர் கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த கோவிலில் கிருஷ்ணசாமி என்பவர் வாழ்நாள் அறங்காவலராக உள்ளார்.

இந்நிலையில் கோவிலில் இந்து சமய அறநிலையதுறையினருக்கு தெரியாமல் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக, இக்கோவிலில் அரங்காவலராக இருந்த சி.கே.கண்ணன் என்பவர் இந்து சமய அறநிலையத்துறையிடம் புகார் அளித்தார். இது குறித்து விசாரிக்க இந்து அறநிலையத்துறை சார்பில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த விசாரணையில் உண்டியல் பணம், நன்கொடை வசூல் ஆகியவற்கு முறையான கணக்கு கொடுக்காமல் இருந்தது, அரசிடம் அனுமதி பெறாமல் கட்டுமான பணிகளை மேற்கொண்டதும், திருகோவிலுக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதுடன், கையாடல் செய்து இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் கோவிலுக்கு எந்த வருமானமும் இல்லை என கூறி விட்டு தற்காலிக உண்டியல் மற்றும் நிரந்தர உண்டியல் வைத்து கையாடல்  செய்தது,  

மதுக்கரை நெடுஞ்சாலையில் 3 கோவிலுக்கு சொந்தமான ரூ.125 கோடி மதிப்பிளான 28 ஏக்கர் நிலம் பட்டாவில் தர்மலிங்கேஷ்வர் கோவில் பெயர் இல்லாமல் இருந்தது தெரியவந்தது. மேலும் இந்த  சொத்துகள் மூலம் வருமானம் பெற எந்த நடவடிக்கையும் அறங்காவலர் எடுக்காமல் இருந்துள்ளார். திருமண மண்டபத்தை அன்னதான மண்டபம் என்று கணக்கு காட்டி, திருமண மண்டபத்தின் மூலம் வந்த வருவாயை கையாடல் செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான அறங்காவலர் கிருஷ்ணசாமி மற்றும் இவரால் அறங்காவலராக நியமிக்கப்பட்ட திருமூர்த்தி ஆகிய இருவரையும் தற்காலிக பதவி நீக்கம் செய்து இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

-சீனி, போத்தனூர்.

Comments