கோவை துடியலூர் பகுதியில் உள்ள வி.ஜி.பாராமெடிக்கல் மற்றும் நர்சிங் கல்லூரியின் விளையாட்டு தின விழா வெகு விமரிசையாக நடைபெற்றது..

 

கோவை துடியலூர் பகுதியில் உள்ள வி.ஜி.மருத்துமனையின் ஒரு அங்கமாக வி.ஜி.பாராமெடிக்கல் கல்லூரி மற்றும் நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் இந்த கல்லூரியின் விளையாட்டு தின விழா மருத்துவமனை எதிரில் உள்ள மைதானத்தில்  நடைபெற்றது.வி.ஜி.குழுமங்களின் தலைவர் மருத்துவர் வெங்கடேஷ் மற்றும்  அறங்காவலர் ஆஷா வெங்கடேஷ் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இதில்,கல்லூரியின் முதல்வர் ருக்மணி அனைவரையும் வரவேற்று பேசினார்.நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கோவை மாநகர போக்குவரத்து காவல்துறை இணை ஆணையர் ராஜராஜன்,கௌரவ அழைப்பாளராக மகரிஷி வித்யா மந்திர் தாளாளர் தர்ம சுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் மாணவ,மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.தொடர்ந்து டென்னிஸ்,கைப்பந்து போன்ற உள் விளையாட்டு அரங்கில் சிறந்து விளையாடிய மாணவ,மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரபடுத்தினர்..தொடர்ந்து கால்பந்து,ஓட்டப்பந்தயம்,ழீளம் மற்றும் உயரம் தாண்டுதல் போட்டிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியின் இறுதியில் வி.ஜி.மருத்துவமனையின் மனித வள மேம்பாட்டு அதிகாரி பிரசாந்த் நன்றியுரை வழங்கினார்..நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,


மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

-சீனி, போத்தனூர்.

Comments