இடுக்கி மாவட்டத்தில் கூடிவரும் டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றி காய்ச்சல்!!!...


கேரள
மாநிலம் இடுக்கி மாவட்டத்தில்  உள்ள சுகாதாரத்துறை அனைத்து வாரமும் நடத்தும் வீக்கிலி வெக்டர் ஸ்டடி(Weekly Vector study) அறிக்கையின்படி புறப்புழா ஊராட்சியில் உள்ள தெங்குபள்ளி பகுதியில் ஹாட் ஸ்பாட்டாய் கண்டுபிடிக்கப்பட்டது. ஹைரிஸ்க் என  தெரிவிக்கப்படும் இத்தகைய இடங்களில் கொசுவின் மூலம் பரவும் நோய்களான டெங்கு காய்ச்சல், சிக்குன் குனியா போன்றவற்றுக்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும். அதனால் மக்கள் எச்சரிக்கையை கடைபிடிக்க வேண்டும் என்று மாவட்ட மருத்துவ அதிகாரி டாக்டர். மனோஜ் எல்., மாவட்ட சர்வைலன்ஸ் அதிகாரி டாக்டர். ஜோபின் ஜி. ஜோசப் ஆகியோர் தெரிவித்தனர்.


நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,


மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ


இத்தகைய நோய்கள் இருந்து தப்பிப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை கொசு வளரக்கூடிய சூழ்நிலைகள் வீடுகளிலோ சுற்றுப்புறங்களிலோ இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். வீட்டினுள் வெளியேயும் அடுத்துள்ள இடங்களிலும் மழைத்தண்ணீர், கால்வாய்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். குப்பி, பாட்டில், சிரட்டை, பிளாஸ்டிக் கழிவுகள், களிப்பாட்டுகள், ரப்பர் டேப்பிங்  கொக்கோ தோட்டங்கள்,  , வீட்டின், தண்ணீர் நிரம்பிய அலங்கார குப்பிகள், உபயோகமற்ற தொட்டிகள், டயர்கள், விறகு மூடும் பிளாஸ்டிக் குப்பைகள், பாறைப் பூத்துகள், முள் குட்டைகள் மரப்பொத்துகள் போன்ற இடங்களில் ஒரு ஸ்பூனில் தண்ணீர் ஒரு வாரத்தில் தொடர்ந்து கட்டினால் கூட டெங்கு காய்ச்சல் பரவுவதற்காக கொசு வளரும். இது தவிர்க்கப்படுவதற்கு வாரத்தில் ஒரு நாள் ட்ரைடே ஆற்றி தண்ணீர் கட்டிக் கிடக்கும் அனைத்து சூழ்நிலைகளையும் நீக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் பன்றி காய்ச்சலும் பரவி வருகிறது பன்றி காய்ச்சல் பரவுவதற்கான அறிகுறி காய்ச்சல் தலைவலி ஜலதோஷம் போன்ற நோய்களினால் அதிகம் காணப்படுகிறது. கடந்த மாதம் மட்டும் இடுக்கி மாவட்டத்தில் 20% குழந்தைகளுக்கு நோய்கள் பரவி உள்ளதாக குழந்தை மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதுபோல நோய்கள் பரப்புவார்கள் மாஸ்க் மற்றும் சானிடைசர் உபயோகிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

நாளைய வரலாறு செய்திக்காக...

-அஜித், மூணாறு.

Comments