எட்டயபுரத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 76 வது பிறந்த நாள் கொண்டாட்டம். !!!!

 

-MMH

தூத்துக்குடி மாவட்டம்  எட்டயபுரம் அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் புரட்சி தலைவி ஜெயலலிதா வின் 76 வது பிறந்த நாள். முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ ராஜூ MLA, ஆலோசனையின் பேரில் எட்டையாபுரம் பட்டது விநாயகர் கோயில் அருகில் எட்டயபுரம் அதிமுக சன நகர கழக செயலாளர் ராஜகுமார் தலைமையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் மகளிர் அணி செல்வி, சாந்தி, நகர அவைத் தலைவர் சேனா கணபதி.  வார்டு செயலாளர்கள் கருப்பசாமி, சின்னத்துரை, சிவா என்கிற சிவசங்கர பாண்டியன், சொக்கன், ஜஸ் முனியசாமி, அம்மா மடம் முருகன், மாவட்ட பிரதநிதி வேலுச்சாமி, கார்த்தி, மோகன், முனியசாமி உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர் -முனியசாமி.

Comments