சென்னையில் இருந்து அயோத்திக்கு இன்று முதல் நேரடி விமான சேவை!!


உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் பிரதிஷ்டை விழா கடந்த 22-ந்தேதி  நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அயோத்திக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிலையில் ராமர் கோயில் செல்லும் பக்தர்கள் வசதிக்காக, சென்னையில் இருந்து அயோத்திக்கு இன்று முதல் நேரடி விமான சேவை வழங்கப்படுகிறது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் சென்னை அயோத்தி – சென்னை, தினசரி விமான சேவையை தொடங்குகிறது. அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா ஜன.22-ம் தேதி நடைபெற்றது. சென்னையில் இருந்து பகல் 12.40 மணிக்கு புறப்படும் விமானம், மாலை 3.15 மணிக்கு அயோத்தி சென்றடையும். அதே விமானம் மாலை 4 மணிக்கு அயோத்தியில் இருந்து புறப்பட்டு மாலை 6.20 மணிக்கு சென்னை வந்து சேரும். விமானத்தில் பயணம் செய்வதற்கு டிக்கெட் கட்டணமாக ரூ.6,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Comments