மருதமலையில் சிறுத்தை நடமாட்டம், அனுவாவி கோவிலில் காட்டுயானைகள் நடமாட்டம்...!! பக்தர்களுக்கு நேர கட்டுபாடு விதித்த வனத்துறை...!!!

 

-MMH

கோவை மாவட்டத்தில் ஆனைக்கட்டி, தடாகம், பேரூர், மருதமலை, போளுவாம்பட்டி, மதுக்கரை ஆகிய பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவு காணப்படுகிறது. குறிப்பாக காட்டுயானைகள், சிறுத்தை, மான்கள், உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி தெகுறிப்பாக மக்கள் அதிகம் செல்லும் மருதமலை முருகன் கோவிலிலும், அனுவாவி முருகன் கோவிலிலும் காட்டுயானைகள் சிறுத்தை ஆகியவை அடிக்கடி தென்படுகின்றன. 


நேற்று முன் தினம் மருதமலை முருகன் கோவிலுக்கு செல்லும் சாலை பாதையில் சிறுத்தை ஒன்று நடமாடியது  இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன் அனுவாவி சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு செல்லும் படிக்கட்டுகளை குட்டியானை உட்பட 8 காட்டுயானைகள் கடந்து சென்றுள்ளது. இதனை அங்கிருந்த ஒருவர் அவரது செல்போனில் பதிவு செய்துள்ளார். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிலையில், மருதமலை கோவிலுக்கு செல்லும் பாதையில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டதால்  கோவிலுக்கு நடந்து செல்வதற்கும் இரு சக்கர வாகனங்களில் செல்வதற்கும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் கார் மற்றும் பேருந்துக்கு காலை 6 மணி முதல் மாலை 7 வரையிலும் அனுமதி வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை  மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன்.

Comments