வேப்பலோடை அரசுப்பள்ளியில் பசுமை அடர்வனம் உருவாக்கத்திற்கு மண்பரிசோதனை மண் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது...

 

கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட அரசு பள்ளிகளில் பள்ளி கல்வித்துறையோடு இணைந்து தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டு அறக்கட்டளை (கூட்டமைப்பு) சார்பில் "பள்ளி பசுமை அடர்வனம்" உருவாக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக தமிழகத்தின் பசுமை போர்வையை மேம்படுத்த தமிழநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பசுமை தமிழ்நாடு இயக்கத்தை 24.09.2022 அன்று உருவாக்கியுள்ளார். தமிழ்நாட்டின் பசுமை போர்வையை 23.5% சதவிகிதத்திலிருந்து  33% சதவிகிதமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. முப்பத்து ஏழு மாவட்டங்களில் 280 கோடி மரக்கன்றுகள் நடவும் திட்டமிடபட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் கிரீன் கமிட்டியும் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. 


ஒவ்வொரு அரசுத்துறைகள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் இணைந்து இப்பணியை திறம்பட மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதியும் வலியுறுத்தி வருகிறார். தமிழக முதல்வரின் கனவை நனவாக்கும் விதமாத தூத்துக்குடி மாவட்ட பள்ளிக்கல்வி துறையோடு இணைந்து தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு முதல் கட்டமாக இருபத்தைந்து அரசு மேல்நிலைப் பள்ளிகளை தேர்ந்தெடுத்து, அப்பள்ளிகளில் பள்ளி பசுமை அடர்வனத்தை உருவாக்க திட்டமிட்டிருக்கிறது. அதற்காக வேப்பலோடை மாதிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் மண் பரிசோதனை செய்து மண்ணுக்கேற்ற மரங்களை நடவு செய்து பள்ளி பசுமை அடர்வனம் உருவாக்கத்திற்கு, மண்பரிசோதனை செய்வதற்காக மண் எடுக்கும் நிகழ்ச்சி பள்ளித் தலைமை ஆசிரியர் ஜி. சேகர் தலைமையில், உதவி தலைமை ஆசிரியர் ஜாய்பிரியா, பள்ளிப் பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்  இராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக  தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு நிறவனரும், மாவட்ட கிரீன் கமிட்டி உருப்பினருமான எம்.ஏ.தாமோதரன் கலந்து கொண்டு மண் எடுக்கும் நிகழ்ச்சியினை துவக்கி வைத்து மண்ணை சேகரித்தார். இதில் பள்ளி பசுமைப்படை மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவாக உடற்கல்வி ஆசிரியர் சிவபாலன் நன்றி கூறினார். நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,


மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நாளைய வரலாறு செய்திகளுக்காக தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர், -முனியசாமி.

Comments