கோவை ராயல்கேர் மருத்துவமனை சார்பாக கருத்தரங்கம் மற்றும் பயிற்சி பட்டறை நடைபெற்றது!!

கோவை ராயல்கேர் மருத்துவமனை சார்பாக  மருத்துவ கருவிகள்  பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு முன்னோக்கிச் செல்வது என்ற தலைப்பில்,கருத்தரங்கம் மற்றும் பயிற்சி பட்டறை நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மருத்துவ துறையில் நோயை கண்டு பிடிக்கவும்,நோயை குணப்படுத்தவும்,மருத்துவ கருவிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.இந்த மருத்துவ உபகரணங்களை மருத்துவர்கள்,மற்றும் துறை சார்ந்த டெக்னீஷயன்கள் பாதுகாப்பாக கையாள்வது குறித்த கருத்தரங்கம் கோவை ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி  மருத்துவமனை சார்பாக நடைபெற்றது. 

இந்தியன் ஃபார்மாகோப்பியா கமிஷன் மற்றும் மத்திய அமைச்சகத்தின் குடும்பநலன் மற்றும் சுகாதாரத்துறை ஆகியோர் இணைந்து நடத்திய இதில்,தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மருத்துவமனை தொடர்பான நிர்வாகிகள்,மருத்துவர்கள், மருத்துவ கருவிகள் தயாரிப்பாளர்கள்,இறக்குமதியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்தியாவின் மெட்டீரியோ விஜிலென்ஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக  மருத்துவ சாதனங்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு முன்னோக்கிச் செல்வது: என்ற தலைப்பில்,பயிற்சி பட்டறை நடைபெற்றது.

முன்னதாக நடைபெற்ற இதன் துவக்க விழாவில் ராயல் கேர்  மருத்துவமனையின் தலைவர் டாக்டர் மாதேஸ்வரன் கருத்தரங்கை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில்,எம்.வி.பி.ஐ.முதன்மை விஞ்ஞானி கலைசெல்வன் மற்றும்  மருத்துவர்கள் பரந்தாமன் சேதுபதி,மணி செந்தில் குமார், காந்திராஜ், சதுரஞ்ஜெய் சுக்லா,,ஹரிஹரன்,அபிராமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

-சீனி, போத்தனூர்.

Comments