தேனி கல்லூரி விழாவில் தூத்துக்குடி சமூக ஆர்வலர் எம்.ஏ.தாமோதரனுக்கு பசுமை செந்துளிர் விருது வழங்கப்பட்டது!!

திருநெல்வேலி தீந்தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை, தேனி கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து தேனி சௌராஷ்டிரா கல்லூரியில் வைத்து  மாணவ மாணவிகளின் திறன் வளர்த்தல் மற்றும் சமூக சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழாவினை நடத்தியது. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தேனி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் கனகராஜ் தலைமையில் நடைபெற்ற விழாவில் தீந்தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை நிறுவனர் வ.சு.நெல்லை அருள் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தீந்தமிழ் கலை இலக்கிய அறக்கட்டடளை தலைவர் மு. கோமதி முன்னிலை வகித்தார்.பள்ளி, கல்லூரி மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சியோடு விழா துவங்கியது. விழாவின் சிறப்பு விருந்தினர்களாக தேனி சௌராஷ்டிரா கல்வி நிறுவனங்களின் தலைவர் ஜவஹர்லால், செயலாளர் கலைவாணி, வீரபாண்டி பேரூராட்சி மன்ற பெருந்தலைவர்  கீதாசசி ஆகியோர் கலந்து கொண்ட விழாவில் தூத்துக்குடியை சேர்ந்த தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டு அறக்கட்டளை (கூட்டமைப்பு) நிறுவனத் தலைவரும், மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினருமான எம்.ஏ.தாமோதரனின் இயற்கைக்கான சேவையை பாராட்டி 'பசுமை செந்துளிர்' சாதணையாளர் விருதினையும் சான்றிதழையும் தேனி வீரபாண்டி பேரூராட்சி சேர்மன் கீதாசசி வாழங்கிப் பாராட்டினார்.

விழாவில் பல்வேறு துறைகளில் சாதித்த சாதனையாளர்கள், தன்னார்வாலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விருதும் சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. நிறைவாக கல்லூரி உடற்கல்வி இயக்குனர் ராஜதுரை நன்றி கூறினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர் 

-முனியசாமி.

Comments