திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் மாசி திருவிழா!!

திண்டுக்கல் நகரில் கேட்டவருக்கு கேட்ட வரம் தரும் சக்தியாக விளங்குகிறார் கோட்டை மாரியம்மன். கோட்டையின் அடிவாரத்தில் அமைந்த மாரியம்மன் என்பதால் அன்னைக்கு 'கோட்டை மாரியம்மன்' என்ற பெயர் வழங்கப்படலானது. 

 கோட்டை மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டு மாசி திருவிழா இந்த வருடம் 54 ஆவது ஆண்டு விழாவாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

திண்டுக்கல் மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் காப்புக்கட்டி விரதம் இருந்து பூக்குழி இறங்குதல், மாவிளக்கு, முளைப்பாரி எடுத்தல் ஆகிய நேர்த்திக் கடன்களை செலுத்தி வருகின்றனர்.

மேலும் அன்னை கோட்டை மாரியம்மன் லட்சக்கணக்கான பூக்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோலாட்டம், மேளதாளங்கள் முழங்க நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து அம்மனை ஆங்காங்கே லட்சக்கணக்கான வண்ணப்பூக்களோடு காத்திருந்த பக்தர்கள் வரவேற்று பூத்தூவி வழிபட்டனர்.

திண்டுக்கல் நகர மக்கள் மாசி பெருந்திருவிழாவை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

-அருண்குமார், கிணத்துக்கடவு.

Comments