அரசியல் கட்சியை துவக்கினார் நடிகர் விஜய்!!


தமிழக வெற்றி கழகம் என அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து கோவை தெற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நடிகர் விஜயின் அரசியல் கட்சியின் பெயரை விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்  டெல்லி தலைமை தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் பதிவு செய்தார். 'விஜய் மக்கள் இயக்கம்' என்பதை அரசியல் கட்சியாக பதிவு செய்து 'தமிழக வெற்றி கழகம்' என அரசியல் கட்சி தொடங்கப்பட்டதாக தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் கோவை தெற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

அதன் படி தெற்கு மாவட்ட தலைவர் கோவை விக்கி,தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் பாபு ஆகியோர் தலைமையில் கிணத்துகடவு, பொள்ளாச்சி,வால்பாறை உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில்  விஜய் மக்கள் இயக்க கொடியுடன் கேக் வெட்டியும் பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில்  ஈடுப்பட்டனர். அதன் படி கோவை சுந்தராபுரம்,குறிச்சி,கிணத்துகடவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் இயக்கத்தினர் கொண்டாடினர்.

-சீனி, போத்தனூர்.

Comments