முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஓட்டப்பிடாரத்தில் மாட்டு வண்டி போட்டியை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கொடியசைத்து தொடங்கி வைத்தார்...

 

தூத்துக்குடி மாவட்டம்  ஓட்டப்பிடாரத்தில்  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்த நாளை முன்னிட்டு மாட்டுவண்டி போட்டி நடந்தது. இந்தப் போட்டிக்கு ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுருமான மோகன் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் வீரபாண்டி கோபி, மேற்கு ஒன்றிய எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் வழக்கறிஞர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வைத்தனர். இதில், தேனி, ராமநாதபுரம், மதுரை, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த 20 பெரிய மாடுகளுக்கு 6 மைல் தொலைவிலும், 36 சிறிய மாட்டுகளுக்கு 5 மைல் தொலைவில் நடைபெற்றன. இந்த தமிழர்களின் வீரமிக்க விளையாட்டு போட்டியான போட்டியில் மொத்தம் 56 மாட்டு வண்டிகள் கலந்து  கொண்டு சீறிப்பாய்ந்த காட்சி கண்கொள்ளா காட்சியாக இருந்தது. இதனை அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் பலரும்  ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

போட்டிகளை அ.தி.மு.க சட்டமன்ற எதிர்க்கட்சி பொருளாளரும்,  தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளர் கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ போட்டிகளை தொடங்கி வைத்தார். சிறிய மாட்டு வண்டியில் நாகம்பட்டி ராயல் வண்டி முதல் பரிசு தட்டிச் சென்றன. முதல் பரிசு ரூ.ரூ.20,076 வழங்கப்பட்டன. 2-வது பரிசு பெற்ற ஈச்சான்தளை சுப்பிரமணியன் வண்டிக்கு ரூ.17,076 வழங்கப்பட்டன. வண்டிக்கு 3-ம் பரிசு பெற்ற கலிங்கப்பட்டி சண்முகராஜ் ரூ.15,076 வழங்கப்பட்டன.  பூஞ்சிட்டு மாட்டுவண்டி பட்டையில் 36 வண்டிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியை இரு பிரிவுகளாக நடந்தன. இதில் முதல் பரிசை தேனி சதீஷ், தேனி அரவிந்த் ஆகிய வண்டிகள் முதல் பரிசை தட்டி சென்றனர். முதல் பரிசு ரூ.15,076த்தை இரு வண்டிகளுக்கு பிரித்து வழங்கப்பட்டன. 2-வது பரிசு பெற்ற ஓட்டப்பிடாரம் மகேந்திரன், மேட்டூர் அழகுபெருமாள் ஆகிய வண்டிக்கு ரூ.13,076 வழங்கப்பட்டன. 3-ம் பரிசு பெற்ற புதியம்புத்தூர் சுரேஷ்குமார், மறுகால் குறிச்சி காவியாகுட்டி ஆகிய வண்டிக்கு ரூ.10,076 பிரித்து வழங்கப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. பரிசுகள் வழங்கினார்.


இந்த  போட்டியில் விளாத்திகுளம் முன்னாள் எம்.எல்.ஏ சின்னப்பன், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கவியரசன், வடக்கு மாவட்ட கலை இலக்கிய அணி துணைச் செயலாளர் போடுசாமி, எட்டையபுரம் நகர செயலாளர் ராஜகுமார்  தூத்துக்குடி வடக்கு மாவட்டம் மாணவர் அணி செயலாளர் SR சின்னத்துரை தூத்துக்குடி வடக்கு மாவட்டம் இணைச் செயலாளர் பேச்சியம்மாள் ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றியம் மாணவர் அணி செயலாளர் பல்சர்மணி புதியம்புத்தூர் நகர செயலாளர் ஆறுமுகச்சாமி மேற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ராஜேஷ்குமார், ஒன்றிய அம்மா பேரவை இணைச் செயலர் பெரியமோகன், மேற்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் கண்ணன், மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் ஆதிலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


நாளைய வரலாறு செய்திகளுக்காக தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர் -முனியசாமி.

Comments