வெளிநாட்டு இன நாய்கள் இந்தியாவில் இறக்குமதி, விற்பனைக்கு தடை!!

 

மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நாய் இனங்கள் என கருதப்படும் 23 ஆக்ரோஷ தன்மை கொண்ட நாய்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

பிட்புல், ரொட்வீலர், புல்டோக், உள்ஃப் நாய்கள் மற்றும் டெரியர் உள்ளிட்ட ஆக்ரோஷ தன்மை கொண்ட நாய்களை இறக்குமதி செய்யவும், அவற்றை விற்பனை செய்யவும் தடை விதிக்கட்டுள்ளது.

வீடுகளில் ஏற்கனவே வளர்க்கப்பட்டு வரும் அத்தகைய இன நாய்களுக்கு கருத்தடை செய்யுமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நாய்கள் மற்றும் மனிதர்களை பாதுகாக்க வேண்டும் என பீட்டா இந்தியா அமைப்பு டெல்லி உயர்நீதிமன்றத்தில்  ரிட் மனுவொன்றை தாக்கல் செய்தது. ​

அந்த வழக்கில், இது தொடர்பாக ஆய்வு செய்ய நிபுணர்கள் மற்றும் விலங்குகள் நல அமைப்புகளின் குழு ஒன்றை அமைக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து கால்நடை வளர்ப்பு ஆணையர் தலைமையில் அமைக்கப்பட்ட நிபுணர் குழு வெளிநாட்டு இன நாய்கள் விற்பனைக்கு தடை செய்ய பரிந்துரைத்ததன் அடிப்படையில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Comments