கேஜி குழுமத்தின் திருமதி திவ்யலட்சுமி விருது வழங்கும் விழா!!


கோவை: கேஜி கல்வி குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் திருமதி திவ்யலட்சுமி அவர்களை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் சிறந்த பெண் சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்து வருகின்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த நிகழ்வு கே ஜி ஐ எஸ் எல் வளாகத்தில் உள்ள திரு கே கோவிந்தசாமி நாயுடு அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் கேஜி குழுமத்தின் தாளாளர் பத்மஸ்ரீ டாக்டர் பக்தவச்சலம் மற்றும் நிர்வாக அறங்காவலர் அசோக் பக்தவச்சலம் ஆகியோர் கலந்துகொண்டு விருதுகளை வழங்கி கௌரவித்தனர். கே ஜி ஐ எஸ் எல் கல்வி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி திரு அரவிந்த் ராஜேந்திரன் அவர்களின் இவ்விழா சிறப்பாக நடைபெற்றது.

டாக்டர் டெஸ்ஸி தாமஸ், ஏரோநாட்டிகல் சிஸ்டம்ஸின் முன்னாள் இயக்குநர் ஜெனரல்,திருமதி ரேஷ்மா நிலோபர் விசாலாட்சி, இந்தியாவின் முதல் மற்றும் ஒரே பெண் மரைன் பைலட் திருமதி திரிவேணி ஆச்சார்யா- ஆட்கடத்தலுக்கு எதிரான போராளி, திருமதி வனிதாரங்கராஜ், நிறுவனர் - சரணாலயம், திருமதி டௌலத் பீ கான் நிறுவனர் சாஹாஸ், திருமதி ராஜி அசோக், ஆட்டோ டிரைவர், நிறுவனர் இணையும் கைகள், திருமதி சங்கீதா எஸ். மெய்டன் பெண் பாடிபில்டர் மற்றும் பணிப்பெண்ணாக இருந்து மாரத்தான் வீராங்கனையாக மாறிய திருமதி வசந்தி ஆனந்தன் மற்றும் திருமதி கரோலினா கோஸ்ஷாமி (unofficial இந்திய கலாச்சார தூதர்) போன்ற பெண் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

KINDATHON அமைப்பில் பங்கேற்ற 300 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. காட்சி தொடர்பியல் துறையின் சார்பாக நடந்த வர்ண பந்தம் நிகழ்வில் பங்கேற்றவர்களை கௌரவிக்கும் விதமாக விருது வழங்கப்பட்டது. ஸ்ரீமதி அறக்கட்டளையின் திவ்யலட்சுமி சார்பாக 30 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. நிர்வாக அறங்காவலர் முனைவர் அசோக் பக்தவச்சலம் அவர்களின் நன்றியுரையுடன் விழா நிறைவுற்றது.

-சீனி, போத்தனூர்.

Comments