My V3 Ads பொருட்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ள முடிவு!!


நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் விஜயராகவன்(48). இவர் சில ஆண்டிற்கு முன் மதுரையில் போகர் ஹெல்த் கேர் என்ற நிறுவனத்தை துவக்கினார். பின்னர் வி-ராஸ் என்ற நிறுவனத்தையும் வி3 ஆன்லைன் டிவி போன்றவற்றையும் நடத்தி வந்துள்ளார். 

இதன் மூலமாக இவர் பல லட்சம் பேரிடம் முதலீடுகளை வாங்கி குவித்துள்ளதாக தகவல் வெளியானது. பின்னர் இவர் மைவி3 ஆட்ஸ் என்ற நிறுவனத்தை துவக்கினார். இவரின் கூட்டாளியான கோவை வெள்ளக்கிணறு பகுதியை சேர்ந்த சக்தி ஆனந்தன்(43) என்பவர் இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக செயல்பட்டு கவனித்து வருகிறார்.

மைவி 3 ஆட்ஸ் நிறுவனம் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கவர்ச்சிகரமான வகையில் அறிவிப்பு வெளியிட்டு முதலீடுகளை பெற்றது. வசியமாத்திரை, ஆயுர்வேத மாத்திரை, கமிஷன் என பல்வேறு திட்டங்களை அறிவித்து முதலீடுகளை குவித்து வருகிறது. இதில் உறுப்பினராக சேர ரூ.360 செலுத்த வேண்டும். தொகை குறைவாக இருந்ததால் ஆயிரக்கணக்கனோர் லட்சக்கணக்கில் பணத்தை வழங்கினர். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

1.20 லட்ச ரூபாய் செலுத்தினால் மாதம் 54 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது. 18 ஆயிரம் ரூபாய் செலுத்தி விட்டு 6 பேரை உறுப்பினராக சேர்த்தால் மாதம் 54 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் எனவும் தகவல் வெளியிடப்பட்டது. தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இதில் முதலீடு செய்திருப்பதாக கூறப்படுகிறது. 

முதலீட்டு தொகை 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிகமாக இருக்கும் என தெரிகிறது. கமிஷனர் அலுவலகத்தில் சக்தி ஆனந்தன் கூட்டம் போட்டு முற்றுகை போராட்டம் நடத்திய போது போலீசார் இவரை கைது செய்தனர். இதற்கிடையே மைவி3 நிறுவனத்தின் உரிமையாளர் விஜயராகவன், தேசிய அளவில் அரசியல் கட்சி துவக்க போவதாகவும், பல லட்சம் முதலீட்டாளர்களை கட்சி உறுப்பினர்களாக மாற்றவும் திட்டமிட்டிருப்பதாக தனது யூடியூப் சேனலில் தெரிவித்தார். இது தொடர்பான அறிவிப்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில் இவர் போலியான டாக்டர் பட்டத்தை பெற்று மோசடி செய்திருப்பதாக தெரியவந்தது. அண்ணாமலை பல்கலைகழகத்தில் பட்டம் வாங்கிய போது இவர் போலியான டாக்டர் பட்டம் காட்டி அதை வைத்து பெரும் முதலீடுகளை குவித்திருப்பதாக தெரிகிறது. மேலும் மைவி3 ஆட்ஸ் முதலீட்டாளர்களுக்கு விஜயராகவன் பெயரில் உள்ள நிறுவனத்தில் இருந்து 80 வகையான மூலிகை பொருட்கள் சப்ளை செய்யப்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த விவரங்களின் அடிப்படையில் மதுரையில் கோவையில் இருந்து சென்ற மாநகர குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் இரவு விஜயராகவனை கைது செய்து கோவைக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவரை கோவை ஜேஎம் 7 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

அவரிடம் இருந்து ஒரு செல்போன், போலி டாக்டர் பட்டம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர் மீது 465, 468, 471 மற்றும் 420 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர். அதில், மொத்தம் எத்தனை பேரிடம் முதலீடு பெறப்பட்டுள்ளது, அவற்றிம் மதிப்பு எவ்வளவு? இதில் தொடர்புடையவர்கள் யார்? என பல்வேறு கோணங்களில் விசாரிக்க உள்ளனர்.

கைது செய்யப்பட்ட விஜயராகவன் கோவை, அன்னூர் மற்றும் பாண்டிச்சேரியில் சித்வா ஹெர்பல் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இந்த நிறுவனத்தில் இருந்தே மைவி3 ஆட்ஸ் நிறுவனத்துக்கு ஆயுர்வேத மாத்திரைகள், மூலிகை மற்றும் உணவுப்பொருட்களை சப்ளை செய்து முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்ததும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. 

மேலும் அவர் விற்பனை செய்த பொருட்களின் தரம் குறித்தும் ஆய்வு செய்ய உள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன்..

Comments