'குமரகுரு யுகம் 2025' நடைபெற உள்ளதாக யுகம் குழுவினர் அறிவிப்பு!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கடந்த 2013ம் ஆண்டு முதல் கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு கல்லூரி வளாகத்தில், யுகம் எனும் நிகழ்ச்சி ஆண்டு தோறும் நடத்த பட்டு வருகின்றது. இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டுக்கான யுகம் நிகழ்ச்சி, வருகின்ற 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு, கோவை பந்தயசாலையில் நடைபெற்றது அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய குமரகுரு கல்லூரியின் அசோசியேட் டீன் விஜிலேஷ் மற்றும் அசோசியேட் இயக்குநர் டாக்டர் ஷீலா ஸ்ரீவத்சா மற்றும் மாணவர்கள் ஷான்வி, சமர் உள்ளிட்ட யுகம் குழுவினர் கூறியதாவது;
தென் இந்தியாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப கலாச்சார விழாவாக வளர்ந்துள்ள யுகம், இந்த ஆண்டும் மாணவ மாணவியர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பல்வேறு நிகழ்வுகளை கொண்டுள்ளது. இந்த ஆண்டு 100க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் நடைபெற உள்ளதாகவும், இதன் மூலமாக, ஆயிர கணக்கான மாணவ மாணவியர்களுக்கு கற்றல், மற்றும் கலாச்சார போட்டிகளை நடத்த உள்ளதாக தெரிவித்தனர். மேலும் இந்த ஆண்டு மெனிபெஸ்ட் என்ற கரு பொருளின் கீழ் நிகழ்வுகள் நடைபெற உள்ளதாக தெரிவித்தனர்.
மேலும் தொழில் முனைவோர்களின் அனுபவங்கள், தொழில்நுட்ப ஆராய்ச்சி, பாதுகாப்பான தொழில் கண்காட்சிகளும் நடைபெற உள்ளதாகவும், வளர்ந்து வருகின்ற டிஜிட்டல் துறையின் மேம்பாடுகளின் கீழ், திரைப்படம் தயாரித்தல், மனநல அறிவியல் மற்றும் தொழில் முனைவோர் பயிற்சி, போன்ற பிரத்யேக பயிலரங்கங்களும் நடைபெற உள்ளது என்றனர்.. மேலும் இந்த ஆண்டு 17 மாநிலங்களில் உள்ள 200க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும், இந்த ஆண்டு மாணவர்களின் சிறந்த படைப்புகளை தேர்வு செய்து பரசு தொகைகளும் வழங்க உள்ளதாகவும் இதற்காக 15 லட்ச ரூபாய் வழங்க பட உள்ளதாக தெரிவித்தனர்.
கூடுதலாக பருவநிலை மாற்றம், நீர் மேலாண்மை, கழிவு நிர்வாகம், மற்றும் புதுமையான சுத்த ஆற்றல் தீர்வுகளுக்கு, சிறப்பு பரிசாக 1 லட்சம் வழங்குவதுடன் சிறந்த திட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது என தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி, போத்தனூர்.
Comments