தமிழக வணிகர் சம்மேளனம் வால்பாறையில் கடை அடைப்பு அறிவிப்பு! - எந்த தேதியில் என்று உங்களுக்கு தெரியுமா..?

கோவை மாவட்டம் வால்பாறை வருகின்ற 29-03-2025 சனிக்கிழமை அன்று மத்திய அரசு அறிவித்துள்ள சுற்றுச்சூழல் உணர்வு திறன் மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து, தேயிலைத் தோட்ட தொழிலாளர், ஆட்டோ வேன் கார் ஓட்டுநர்கள் முதல், அனைவரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

வேலை நிறுத்தத்துக்கு முழு ஆதரவு கொடுத்து ஒரு நாள் கடைகளை அடைக்க வேண்டும். இப்பிரச்சினை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது இன்று வியாபாரத்தை பார்த்தால் வருங்காலத்தில் நிரந்தரமாக வியாபாரத்தை இழக்க நேரிடும் என்பதை கருத்தில் கொண்டு நமது வணிகர் சம்மேளனத்தின்  நிர்வாகிகள், உறுப்பினர்கள் கடைகளை அடைத்து ஆதரவு கொடுங்கள். 

இந்த பிரச்சனை சம்பந்தமாக நமது அமைப்பின் சார்பாக தமிழக முழுவதும் ஆட்சியாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக விரைவில் போராட்டத்தை அறிவிப்பேன் எனவும், வணிகர்கள் மற்றும் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதே, நமது சங்கத்தின் நோக்கம் எனவும் கூறி இதன்படி செயல்படுங்கள் ஆதரவு கொடுங்கள் என்று  தமிழக வணிகர் சம்மேளனத்தின் தலைவர் தமிழ்ச்செல்வன் அவர்கள் வால்பாறை நிர்வாகிகளுக்கு வணிகர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-P.பரமசிவம்.

Comments