கோவையில் முதன்முறையாக சர்வதேச டிஜிட்டல் பிலிம் மேக்கிங் மற்றும் வி.எஃப்.எக்ஸ் டிப்ளமோ பாடத்திட்டம் துவக்கம்!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதற்கான துவக்க விழா கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், ஹிந்துஸ்தான் கல்வி குழுமங்களின் தலைவர் சரஸ்வதி,நிர்வாக இயக்குனர் டாக்டர் கே. பிரியா, ஆகியோர் தலைமை தாங்கினர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பாகுபலி மற்றும் ஆர்.ஆர்.ஆர்.போன்ற மெகா ஹிட் திரைப்படங்களின் தலைமை வி.எஃப். எக்ஸ். மேற்பார்வையாளர் பீட் டிரேப்பர் ,மற்றும் டி.என்.இ.ஜி. நிறுவனத்தின் VFX துறைத் தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய பாடத்திட்டத்தை துவக்கி வைத்து பேசினர்.
அப்போது வளர்ந்து வரும் வி.எஃப்.எக்ஸ் துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் மற்றும் தொழில் வாய்ப்புகள் குறித்து விரிவாக மாணவர்களிடம் எடுத்து கூறினர்.
குறிப்பாக பாகுபலி,ஆர்.ஆர்.ஆர்.போன்ற திரைப்படங்களில் பணியாற்றிய பீட் டிரேப்பர் திரைப்படங்களில் தற்போது வி.எஃப்.எக்ஸ்.துறையின் பயன்பாடுகள் குறித்து விளக்கமளித்தார்.
முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய, ஜே.டி.கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநரான டாக்டர் சஞ்சித் தனராஜன் அகாடமிக் கல்வி மற்றும் தொழில்துறை இடையேயான இடைவெளியை நீக்கும் நோக்கில் செயல்படும் எதிர்காலத்தை நோக்கி உருவாக்கப்பட்ட மீடியா கல்வி நிறுவனம். கோவை நகரத்தில் உள்ள மூன்று மையங்களில் 3,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி பெற்றுள்ளதாகவும் JD நிறுவனம் டிசைன், மீடியா மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த வேலைவாய்ப்பு சார்ந்த பாடநெறிகளை வழங்குவதாக தெரிவித்தார்.
நிகழ்ச்சியில்,உலக வடிவமைப்பு கவுன்சிலின் இந்தியத் தலைவர் பிலிப் தாமஸ், டி.பி.ஐ.எம்.ஏ.இந்திய தலைமை அதிகாரி ஜேசுராஜா,இயக்குனர் ஜான் பால் சுவாமிநாதன், ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் பொன்னுசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இரண்டு நிலை கொண்ட இந்த ஒரு வருட தொழில்முனைவு டிப்ளமா பயிற்சியில் 8 மாதங்கள் திரைத்துறை சார்ந்த மீடியா மேலாண்மை, எடிட்டிங், மோஷன் கிராபிக்ஸ், சவுண்ட் டிசைன், கலர் கிரேடிங், ஃபினிஷிங் என போஸ்ட் புரொடக்ஷன் சார்ந்த ஆழ்ந்த பயிற்சிகளும், 1 மாதம் பாரிஸில் முழுநேர வசிப்புடன் கூடிய பயிற்சியும். வழங்க உள்ளது குறிப்பிடதக்கது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி, போத்தனூர்.
Comments