ஸ்ரீ பூஜா புரோமோட்டர்ஸ் நிறுவனத்தின் வியாழம் புதிய வீட்டு மனைகள் விற்பனை துவக்க விழா!!

கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் துவங்கப்பட்ட வியாழம் மனை பிரிவு திட்டத்தை ஃபேரா தேசிய தலைவர் ஹென்றி சிறப்பு விருந்தினராக  பங்கேற்று முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கோவையில் சுமார் இருபது வருடங்களாக ரியல் எஸ்டேட் துறையில் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்ற நிறுவனமாக செயல்பட்டு வரும் ஸ்ரீ பூஜா புரோமோட்டர்ஸ் நிறுவனம் வீட்டு மனைகள்,வில்லாக்கள் என பல்வேறு திட்டங்களை துவக்கி உள்ளனர்.

இந்நிலையில் கோவை மலுமிச்சம்பட்டி பகுதிக்கு உட்பட்ட எல்.அண்ட் டி.அலுவலகம் அருகில் வியாழம் எனும் புதிய வீட்டு மனைகள் விற்பனை திட்டத்தை துவக்கி உள்ளனர்.

இதற்கான துவக்க விழா ஸ்ரீ பூஜா புரோமோட்டர்ஸ் நிறுவனத்தின் தலைவர் பழனிசாமி மற்றும்  நிர்வாக இயக்குனர் நவீன் பாலாஜி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக அகில இந்திய ரியல் எஸ்டேட்  கூட்டமைப்பின் தேசிய தலைவர் டாக்டர் ஹென்றி கலந்து கொண்டு முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கவுரவ விருந்தினர்களாக  கூட்டமைப்பின் துணை தலைவர் நேரு நகர் நந்து,தேசிய செயல் செயலாளர் செந்தில் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கல்லூரி,மருத்துவமனை,பேருந்து மற்றும் இரயில் நிலையம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும்  வியாழம் வீட்டு மனைகள் அமைந்துள்ள இடத்திற்கு மிக அருகில் இருப்பதாகவும்,கோவையில் வசிப்பவர்கள் மட்டுமின்றி வெளியூர் மற்றும் வெளி மாநில,வெளிநாடுகளில் உள்ளோர் கோவையில் காலி மனையில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு வியாழம் மனைப்பிரிவுகள் நல்ல வாய்ப்பாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தனர்.

துவக்க விழாவை முன்னிட்டு சிறப்பு விற்பனைகளும் நடைபெற்று வருவதாக பூஜா புரோமோட்டர்ஸ் நிறுவனத்தினர் தெரிவித்து உள்ளனர்.

முன்னதாக அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய தலைவர் ஹென்றி செய்தியாளர்களிடம் பேசுகையில், வில்லங்க சான்று வழங்கும் திட்டத்தில் டிஜிட்டல் முறையில் அரசு தற்போது அறிமுகம் செய்துள்ள  திட்டம் பொதுமக்களுக்கு  மிகவும் பயனுள்ளங எளிதான திட்டம் என தெரிவித்தார்.

ரியல் எஸ்டேட் துறையில் மலைகள் சார்ந்து உள்ள  பகுதிகளில் உள்ள நிலங்களை விற்பனை செய்வதில் உள்ள ஆக்கா விதிமுறையை எளிமைபடுத்த தொடர்ந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்த அவர்,அரசு இதில் கவனம் செலுத்தி விதிமுறைகளை எளிமைபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்

வியாழம் வீட்டு மனை பிரிவு விற்பனை துவக்க விழாவில் ஃபேரா கூட்டமைப்பின் மாநில,மாவட்ட நிர்வாகிகள் ஜெயம் லேண்ட் புரோமோட்டர்  கண்ணன்,சுரேஷ்குமார்,வில்சன் தாமஸ்,கணேஷ்,மெடிக்கல் நாராயணன்,ஜெகந்நாதன்,எஸ்.கே.எம்.மாணிக்கம்,கிருஷ்ணமூர்த்தி,பாஸ்கர்,அய்யப்பன்,ஹரீஷ்,அண்ணாமலை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி, போத்தனூர்.

Comments