ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் மெட்ரொபாலிஸ் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் அரசம்பாளையம் அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது!!

கோவை கிணத்துக்கடவு தொகுதியில் உள்ள அரசம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் மெட்ரொபாலிஸ் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இணைந்து மாணவர்களின் வசதிக்காக ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நான்கு வகுப்பறை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

என்.கே.மகாதேவ ஐயரின் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக இந்த கட்டிடம் கட்டப்பட்டது. இதற்கு அமுத செம்மல் என். கே. மகாதேவன்' என பெயரிடப்பட்டுள்ளது. 

இதில் சிறப்பு விருந்தினராக தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறையின் முதன்மைச் செயலாளர் சந்திர மோகன் கலந்துகொண்டு திறந்து வைத்தார். இதில் பேசிய அபர் கோவை அரசம்பாளையத்தில் இன்று 4 வகுப்பறைகள் தனியார் பங்களிப்பு மூலம் கட்டப்பட்டுள்ளது. அனைவருக்கும் நல்ல கல்வி கிடைக்க வேண்டும். அரசின் சார்பில் கட்டிடம், ஆசிரியர்கள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கு இலவச புத்தகம், ஆடைகள், காலனி அனைத்தும்  இலவசமாக கொடுக்கப்படுகிறது என்றார். 

கோவையில் பல்வேறு தொழில் நிறுவனங்கள், தொழில் முனைவோர்கள் உள்ளனர். அவர்கள் நாங்கள் மட்டும் உயர்ந்தால் போதாது. எங்களைச் சுற்றி உள்ளவர்களும்  வளர வேண்டும் என்று முனைப்புடன் செயல்படுகின்றனர் என்றார்.

மேலும் இவ்விழாவில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார்  முன்னிலை வகித்தார். 

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தலைவர் திரு. கிருஷ்ணன், ரோட்டரி மெட்ரொபாலிஸ் சங்கத்தின் தலைவர் திரு. வரதராஜன், சங்கத்தின் உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி, போத்தனூர்.

Comments