டெர்மினல் 2 - கோவையின் முதல் 24 மணி நேரம் இயங்கும் கஃபே துவக்கம்!! உள்ளூர் முதல் உலக நாடுகளின் உணவு வகைகள் வரை அனைத்தும் ஒரே இடத்தில்!!

கோயம்புத்தூர் மாநகரில் முதல் முறையாக 24 மணி நேர இயங்கும் ' டெர்மினல் 2  கஃபே ' அவினாசி சாலை - கோவை சர்வதேச விமான நிலையம் அருகாமையில் ஆரம்பமானது. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கோவையை சேர்ந்த பிரபல ஹரிபவனம் ரெஸ்டாரண்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்டின் புதிய முயற்சியாக, ‘டெர்மினல் 2’ என்ற இந்த கஃபே  திங்கட்கிழமையன்று திறக்கப்பட்டது.

இதுபற்றி ஹரிபவனம் ரெஸ்டாரண்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு.பாலச்சந்தர் ராஜு கூறுகையில்:- 

"டெர்மினல் 2 கஃபே விமான நிலைய சார்ந்த ஸ்டைலில் உள்ள 24 மணி நேரமும் இயங்கும் கஃபே. இதில் உள்நாட்டில் இருந்து உலக நாடுகளில் உள்ள பிரபல உணவுகள் மற்றும் பானங்கள் எல்லாமே இங்கு கிடைக்கும். காபி, வடை, போண்டா, பஜ்ஜி, ஜூஸ், லஸ்ஸி, முதல் மில்க்ஷேக், பர்கர், சாண்ட்விச், ரோல், பாஸ்தா, ஸிஸ்லர் என தென்னிந்திய மற்றும் சர்வதேச உணவுகளை தினமும் 24 மணி நேரமும் இங்கு வழங்குகிறோம்."

மேலும், கோவை மக்கள் விரும்பும் பழைய சோறு உடன் கருவாடு (விரும்புவோருக்கு), கம்மன் கூழ், அரிசி பருப்பு சாதம், பிரியாணி ஆகியவையும் கிடைக்கும்.

"அதிகாலை நடைபாதை பயிற்சி மேற்கொள்ளும் நபர்களுக்காகவும் ஜிம்மில் உடற்பயிற்சி செய்பவர்களுக்கும்

புரோட்டீன் ஷேக், ஏ.பி.சி ஜூஸ், அருகம்புல் ஜூஸ், நெல்லிக்காய் ஜூஸ் போன்ற ஆரோக்கியமான உணவுகளும் இந்த  கஃபேவில் இடம் பெற்றுள்ளன," என திரு. ராஜு கூறினார்.

இக்கேஃபேவில் 100 பேருக்கு அமர்விடம் மற்றும் 30 கார்களுக்கு நிறுத்தும் வசதிகளை வழங்கியுள்ளோம். சுவிகி, சோமாடோ ஆகிய உணவு விநியோக தளங்களிலும் நாங்கள் உள்ளோம்.

"நெருங்கிய மருத்துவமனைகளில் அவசரமாக வரும் நோயாளிகள் மற்றும் உறவினர்கள், விமான நிலையத்திலிருந்து நள்ளிரவில் வரும் பயணிகள், அருகிலுள்ள ஐ.டி. பூங்காக்களில் வேலை செய்து நள்ளிரவில் வீடு திரும்புவோ ருக்காக எப்போதும் உணவு கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்," என அவர் கூறினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி, போத்தனூர்.

Comments