டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை தனது 2-வது புதிய கிளையை துவக்கியுள்ளது!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்று, புதிய மருத்துவமனை கிளையை கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி,கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர்,இந்திய மருத்துவ சங்கத்தின் கோவை கிளை செயலாளர் டாக்டர் சீதாராமன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
பாலக்காட்டில் தலைமையகத்தை கொண்டுள்ள இந்த மருத்துவமனை, கடந்த 25 ஆண்டுகளாக கேரளா மற்றும் தமிழகத்தில் 9 கிளைகளுடன் மக்கள் நலனில் நம்பிக்கையுடன் செயல்படுகிறது.
டிரினிட்டி மருத்துவ மையம், 1999-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த மருத்துவமனை தலைமை டாக்டர் ஏ. கே. ஸ்ரீதரன், நிர்வாக இயக்குநர் டாக்டர் சுனில் ஸ்ரீதர், தலைமை மருத்துவ இயக்குநர் டாக்டர் மிருதுளா சுனில் ஆகியோரின் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கோவை கிளை மருத்துவ சேவை டாக்டர் ஏ. எம். மும்தாஜ் மற்றும் டாக்டர் மதுசூதன் ஆகியோர் தலைமையில் செயல்பட்டு வருகின்றது.
இது குறித்து டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை மருத்துவமனையின் தலைமை டாக்டர் ஏ. கே. ஸ்ரீதரன் கூறும்போது :- கோவை சிங்காநல்லூரில் 6500 சதுர அடியில் அமைந்துள்ள இந்த புதிய மருத்துவமனை, அதிநவீன மருத்துவ வசதிகளுடன் 14 நர்சிங் ஊழியர்கள் மற்றும் கண் சிகிச்சை நிபுணர்களுடன் செயல்பட உள்ளது. மருத்துவ ஆலோசனை மையங்கள், கண் பரிசோதனை, மருந்தகம், அறுவை சிகிச்சை மையம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் மருத்துவமனையின் ஒரே கூரையின் கீழ் உள்ளது.
இதில் ஜெனரல் ஆப்தால்மாலஜி, கண்புரை, குளுக்கோமா, மெடிக்கல் ரெடினா, லேசிக், கார்னியா சிகிச்சை, குழந்தைகள் கண் சிகிச்சை மருத்துவர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் செயல்படுகின்றன. இந்த பிரிவுகளுக்கு டாக்டர் முகமது ஷாபாஸ் கார்னியா தலைமை வகித்து செயல்படுகிறார்.
புதிய மருத்துமனையின் தொடக்க விழாவை முன்னிட்டு, ஜூலை 13 முதல் ஆகஸ்ட் 15 வரை அனைவருக்கும் இலவச ஆலோசனையும், 100 நபர்களுக்கு இலவச கண்புரை அறுவை சிகிச்சையும், 400 நபர்களுக்கு இலவச கண் கண்ணாடியும் வழங்கப்பட உள்ளது.
மேலும் காணும் வளம் எவ்வளவு முக்கியமோ, அதற்கு முறையான பராமரிப்பும் அவசியம். கோவையில் நாங்கள் தரமான கண் சிகிச்சையை வழங்க உறுதிபூண்டுள்ளோம். இந்த பயணத்தில் மக்களோடு சேர்ந்து பயணிக்க விரும்புகிறோம். மக்களின் பார்வை பாதுகாப்புக்காக டிரினிட்டி தனது சேவையை விரிவுபடுத்துவதில் பெருமைப்படுகிறது, என நிர்வாக இயக்குநர் டாக்டர் சுனில் ஸ்ரீதர் கூறினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி, போத்தனூர்.
Comments