ஸ்ரீ கோதண்ட ராமர் திருக்கோவிலில் தொடர்ந்து 65 நாட்கள் நடைபெறும் சாதுர்மாஸ்ய வரத மஹோத்ஸவம் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது!!

கோவை ராம் நகர்  பகுதியில் உள்ள ஸ்ரீ கோதண்ட ராமர் திருக்கோவிலில், தொடர்ந்து 65 நாட்கள் நடைபெறும் சாதுர்மாஸ்ய வரத மஹோத்ஸவத்தில்  சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீசச்சிதானந்த தீர்த்த மகா சுவாமிகள் கலந்து கொண்டு சிறப்பு பூஜைகள் நடத்த உள்ளார்.


நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கோவை காந்திபுரம், ராம் நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ கோதண்ட ராமர் திருக்கோவிலில், உலக மக்கள் நன்மை வேண்டி, சாதுர்மாஸ்ய வரத மஹோத்ஸவம் அவ்வ பொழுது நடைபெறுவது உண்டு. திருக்கோவில் துவங்கபட்ட நாட்கள் முதல் இதுவரை நான்கு முறை இத்தகைய சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றுற்ள நிலையில், இதன் தொடர்ச்சியாக 5வது முறையாக  இந்த ஆண்டு ஜூலை 10ம் தேதி முதல் செப்டம்பர் 7ம் தேதி வரை தொடர்ந்து 65 நாட்கள் நடைபெற உள்ளது. 

இந்த சிறப்பு மஹோத்ஸவத்தில் சத்தீஸ்கர் மாநிலம் விலாஸ்புரியில் உள்ள, ஸ்ரீ சக்கர மகா மேரு பீடத்தின் பொருப்பாளர் ஸ்ரீ சச்சிதானந்த தீர்த்த மகா சுவாமிகள் கலந்து கொண்டு 65 நாட்களும் நடைபெற உள்ள பல்வேறு ஆன்மீக வழிபாட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீ கோதண்ட ராமர் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீ கோதண்ட ராமர் திருக்கோவில் தலைவர், நாக சுப்ரமணியம் கூறியதாவது;

கோவைக்கு வருகை தர உள்ள சுவாமிகளுக்கு பிரமாண்ட வரவேற்பை அளிக்க பக்தர்கள் சார்பாக திட்டமிடப்பட்டுள்ளது. சுவாமிகள் இங்கு தங்கியிருந்து 65 நாட்களும் சிறப்பு பூஜைகள் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் அடுத்த இரண்டு மாதங்களுக்கு திருக்கோவில் வளாகத்தில் சிறப்பு பூஜைகள், வேத சொற்பொழிவுகள், கர்நாடக இசை கச்சேரிகள், என பல்வேறு ஆன்மீக நிகழ்ச்சிகளும் நடைபெறும். 

இதனை அனைத்து பக்தர்களும் கண்டு ரசித்து ஸ்ரீ கோதண்ட ராமர் அருள் பெற வேண்டும் என கேட்டு கொண்டார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் பொழுது, திருக்கோவில் காரியதரிசி விஸ்வநாதன், ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்க உபதலைவர் பரசுராமன், மற்றும் ஸ்ரீ கோதண்ட ராமர் திருக்கோவில் உறுப்பினர் ஜெகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி, போத்தனூர்.

Comments