ஆசிய கராத்தேப் போட்டிக்கு நடுவர் தேர்வு...

 

ஒன்பதாவது ஆசிய கராத்தே போட்டி மற்றும் நடுவர் தேர்வு இலங்கையில் இரண்டாம்‌ தேதி முதல் ஒன்பதாம் தேதி வரை நடைபெற்றது. இதில் ஆசிய நாடுகளை சார்ந்த விளையாட்டு வீரர்களும் நடுவர்களும் கலந்து கொண்டனர் இவற்றில் இந்தியாவின் சார்பில் கலந்துகொண்ட,


திருப்பூர் மாவட்ட கராத்தே சங்கத்தின் பொருளாளர் திரு .கௌதம் ரகுநாதன் அவர்கள் தான் தேர்வு எழுதிய கத்தா மற்றும் குமுத்தே ஆகிய இரு பிரிவுகளிலும் தேர்ச்சி பெற்று ஆசிய கராத்தே சங்கத்தின் நடுவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் . வெற்றி பெற்ற இவருக்கு திருப்பூர் மாவட்டத்தில் கராத்தே சங்கத்தின் சார்பிலும் மாவட்ட விளையாட்டு சங்கங்களின் சார்பிலும் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டனர்


நாளை வரலாறு செய்திகளுக்காக 

-ப. செந்தில் குமார்.

Comments