கந்தர்வக்கோட்டை அருகே வாசிப்பு இயக்கத்தின் மூலம் பேச்சுப்போட்டி!!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வாசிப்பு இயக்கத்தின் மூலம் ஒவ்வொரு வாரமும் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

வாசிக்கும் விதத்தில் கதை சொல்லும் அமர்வுகள், வாசிப்பு சவால்கள், புத்தகக் கழகங்கள் ஆகியவை மூலம் அறிவுத்திறன் தேடல் மற்றும் கருப்பொருள் வாசிப்பு வாரம் செயல்படுத்தப்பட்டு வருகிறது . அதன் அடிப்படையில் ஜூலை இரண்டாம் வாரத்திற்கான ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிய உணவில் காமராஜர் பங்கு என்ற தலைப்பிலும், ஏழாம் வகுப்பில் நீர் மேலாண்மைக்கு காமராஜர் பற்றிய விவாதமும், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு காமராஜர் ஆற்றிய பணிகள் குறித்து பேச்சு போட்டியும் நடைபெற்றது. 

இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். அறிவியல் ஆசிரியர் ரகமதுல்லா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். ஆங்கில ஆசிரியர் சிந்தியா அனைவரையும் வரவேற்றார். மாணவர்கள் காமராஜரின் ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்தும் சிறப்பாக பேசினார்கள். 

நிகழ்வின் மூலம் காமராஜரின் வாழ்க்கை வரலாற்று ஆட்சி நிர்வாகம் பற்றி மாணவர்கள் அறிந்து கொண்டனர். வாசிப்பு இயக்கத்தின் மூலம் மாணவர்களின் வாசிப்பு பயிற்சி மேம்பட்டு வருகிறது.  போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டப்பட்டது. நிறைவாக கணினி உதவியாளர் தையல்நாயகி நன்றி கூறினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-ஈசா.

Comments