கந்தர்வக்கோட்டை அருகே அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் மன்ற செயல்பாடுகள் தொடக்க விழா!!
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களிடையே கல்வி இணை மற்றும் கல்வி சார் கல்வி சாரா செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு மற்றும் மாதந்தோறும் ஏற்படுத்துவதற்கு 2025-26 கல்வி ஆண்டிற்கான மன்ற செயல்பாடுகள் தொடக்க விழா நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிகழ்விற்கு பொறுப்பு தலைமை ஆசிரியர் மணிமேகலை தலைமை வகித்தார். மன்ற செயல்பாடு குறித்து அறிவியல் ஆசிரியர் ரகமதுல்லா பேசும் பொழுது அரசு பள்ளிகளில் ஆறு முதல் ஒன்பது வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கல்வி மற்றும் தனித் திறன் மேம்பாட்டில் மன்ற செயல்பாடுகள் பெரும்பங்கு வைக்கின்றன.
பாடப்புத்தகத்தை தாண்டி மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகளை வெளி உணரவும், அவர்களின் பன்முக வளர்ச்சியை உறுதி செய்யவும் மன்ற செயல்பாடுகள் ஒரு அடிப்படை கருவியாக விளங்குகின்றன. அதன்படி இலக்கிய மன்றம், வினாடி வினா மன்றம், சிறார் திரைப்படம் மன்றம், வானவில் மன்றம், கலை மற்றும் பண்பாட்டு மன்றம், சுற்றுச்சூழல் மன்றம் போன்ற பள்ளி அளவில் செயல்படும் அனைத்து மன்ற செயல்பாடுகளுக்கும் பொறுப்பு ஆசிரியர் நியமிக்கப்பட்டது.
ஒவ்வொரு மன்ற செயல்பாட்டிலும் சிறந்து விளங்கும் ஒரு மாணவரை அந்தந்த மன்ற செயல்பாட்டிற்கான தூதுவராக நியமிக்கப்படுவார். அதன்படி ஒவ்வொரு மாதமும் மன்ற செயல்பாட்டுக்கான போட்டிகள் நடைபெறும். மேலும் இவ்வாறாக பள்ளிகளில் மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக முன்னெடுக்கப்படும் கல்வி சார் கல்வி சாரா செயல்பாடுகள் அனைத்தும் மாணவர்களின் தன்னம்பிக்கை வளர்க்கவும், எதிர்கால சவால்களை எதிர்கொள்ளவும் திறனை பெறவும், உறுதுணையாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை எனவே இவ்வகையான அனைத்து செயல்பாடுகளும் ஒவ்வொரு மாணவர்களின் பங்கேற்பனை உறுதி செய்யும் நோக்கில் அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கும் வகையில் திட்டமிட்டு நடத்தப்படுகிறது என்று பேசினார்.
இந்நிகழ்வில் ஆங்கில ஆசிரியர் சிந்தியா, கணினி உதவியாளர் தையல்நாயகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக மன்ற செயல்பாடுகள் குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஈசா.
Comments