புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது!!

கோவை: ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் இண்டஸ்ட்ரியல் சிட்டி 2025-26 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் இண்டஸ்ட்ரியல் சிட்டி 2025-26 ஆம் ஆண்டிற்கான  புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா கோவை ரேஸ்கோர்ஸ் சீமா அரங்கில் நடைபெற்றது.

நிறுவன தலைவர் வழக்கறிஞர் பிரபு சங்கர் தலைமையில் நடைபெற்ற விழாவில்,சிறப்பு விருந்தினராக  ராவ் மருத்துவமனையின் நிர்வாக  இயக்குனர் ஆஷா ராவ் கலந்து கொண்டார்.

முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய வழக்கறிஞர் பிரபு சங்கர்,ரோட்டரி சங்கத்தின் மூலமாக சமுதாயத்திற்கு பலவித சேவைகள் செய்து வருவதாகவும் அதில் முக்கியமான சேவைகளான தண்ணீர், சுகாதாரம், குழந்தைகளுடைய ஹெல்த் சம்பந்தப்பட்ட விழிப்புணர்வுகள், பெண்களுக்கான மருத்துவ விழிப்புணர்வுகள், வயதானோர் சீனியர் சிட்டிசன்களுக்கான சேவைகள் போன்ற முக்கியமான சேவைகளை செய்து வருவதாக கூறினார்.

விழாவில் புதிய தலைவராக ரோட்டேரியன் சண்முகராஜ்,செயலாளராக பிரேம் செந்தில் ஆகியோர் பொறுப்பேற்று கொண்டனர்.

இதில் மாவட்ட இயக்குனர் வரதராஜன்,துணை ஆளுநர் ஜெயகாந்தன்,ஜி.ஜி.ஆர்.குமார் பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் முன்னால் தலைவர் டாக்டர். உமா பிரபு,செயலாளர் அம்பி மூர்த்தி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி, போத்தனூர்.

Comments