கந்தர்வக்கோட்டை அருகே அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது!!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. பள்ளி மேலாண்மை குழு தலைவி கலாராணி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி அனைவரையும் வரவேற்றார். முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவரும், முன்னாள் மாணவர் உறுப்பினர் முத்துக்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவி மலர்கொடி, பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் சாரங்கபாணி, பிரியா, சீனிவாசன், வெள்ளையம்மாள், சீதாலட்சுமி, மகேஸ்வரி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா மாணவர்களின் கல்வித்தரம் குறித்து பேசினார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பள்ளி மேலாண்மை குழுவில் மாநில கற்றல் அடைவு  ஆய்வு முடிவுகள் குறித்தும், திறன் இயக்கம் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் தமிழ், ஆங்கிலம், மற்றும் கணித திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் பொருட்டு திறன் இயக்கமானது ஜூலை மாதம் தொடங்கி ஆறு மாத காலத்திற்கு செயல்படுத்தப்பட உள்ளது.

இவ்வியக்கமானது எழுத்துக்களை அடையாளம் காணுதல், எளிய சொற்கள் வாக்கியங்களை படித்தல் மற்றும் அடிப்படை எண் கணித செயல்பாடுகளை செய்தல் போன்ற கற்றல் விளைவுகளில் போதிய அடைவினை பெறாத மாணவர்களை அடையாளம் கண்டு திறன் வகுப்புகளின் மூலம் இடைவெளியை போக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும், எண்ணும் எழுத்தும் திட்டம் குறித்தும், முன்னாள் மாணவர்கள் வழங்கும் நன்கொடையை நம்ம ஊரு நம்ம ஸ்கூல் பள்ளியில் வலைதளத்தில் பதிவற்றம் செய்வதன் மூலம் மட்டுமே பெற முடியும் என்ற தகவலை உறுப்பினருக்கு தெரிவித்தல், மாற்றுத்திறன் மாணவர்களை உள்ளடக்கிய கல்வி குறித்தும், குழந்தை திருமணம் தடுப்பு, குழந்தை பாதுகாப்பு குறித்த  விழிப்புணர்வு நிகழ்வுகளை பள்ளி மேலாண்மை குழு மூலமாக நடத்த திட்டமிடுதல் குறித்தும், உயர்கல்வி பயிலும் மாணவர்கள் குறித்து வழிகாட்டி, போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு குறித்தும், விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவர்களை ஊக்குவிப்பது  குறித்தும், வாழ்வியல் திறன்களை மேம்படுத்துதல் இதற்கென பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், மாணவர்களுக்கு வங்கி கணக்கில் சேமிப்பு செய்தல் ஊக்குவித்தல் உள்ளிட்டவை குறித்து கலந்துரையாடல் செய்யப்பட்டது. 

மேலும் காலை உணவு திட்டம், இல்லம் தேடி கல்வித் திட்டம் உள்ளிட்டவை குறித்தும் கலந்துரையாடல் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் ஆசிரியர்கள் மணிமேகலை, சிந்தியா, நிவின், வெள்ளைச்சாமி, செல்வி ஜாய், ஜெம்ம ராகினி சகாய ஹில்டா உள்ளிட்டோர் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்நிகழ்வில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-ஈசா.

Comments