சிறந்த பள்ளிக்கான பேராசிரியர் அன்பழகன் விருதுதை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கி பாராட்டு!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு பள்ளிக்கல்வி துறையின் சார்பில் திருச்சி தேசிய கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அண்ணா தலைமைத்துவ விருது, பேராசிரியர் அன்பழகன் விருது, கற்றல் அடைவுகளுக்கான 100 சவாலில் பங்கேற்ற பள்ளிகளுக்கு பாராட்டு உள்ளிட்ட முப்பெரும் விழா பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான பேராசிரியர் அன்பழகன் விருதுனை மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாண்புமிகு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என். நேரு அவர்களும் வழங்கி பாராட்டினார்கள்.
பேராசிரியர் அன்பழகன் விருது :
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பள்ளிக்கல்வித்துறையை மேம்படுத்தும் விதமாக சிறந்த பள்ளிகளை ஊக்கப்படுத்த அண்ணா தலைமைத்துவ விருது, பேராசிரியர் அன்பழகன் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வழங்கி அரசு பள்ளியை ஊக்கப்படுத்தி வருகிறார்.
சிறந்த பள்ளிகளுக்கான விருதினை பெற்றுள்ள அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 180 க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்
எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிக்கப்படுகிறது. சிறந்த பள்ளிக்கான விருதை பெற்றுள்ள் அகச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் சிறப்பான முறையில் எண்ணம் எழுத்து திட்டம் செயல்படுத்தப்பட்டு மாணவர்கள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் வாசிப்பு திறன் மேம்பட்டுள்ளது. கொரோனா கற்றலில் ஏற்பட்ட கற்றல் இழப்பை சரி செய்வதற்கு தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்ட இல்லம் தேடிக் கல்வித் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு கற்றலில் இடைவெளி சரி செய்யப்பட்டுள்ளது.
பள்ளியில் தொடர்ந்து மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. கல்வி இணை செயல்பாடுகளான மன்ற செயல்பாட்டில் திருவள்ளுவர்தமிழ் மன்றம், ஷேக்ஸ்பியர் ஆங்கில மன்றம், ராமானுஜம் கணித மன்றம், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அறிவியல் மன்றம், வினாடி வினா மன்றம், சிறார் திரைப்படம் மன்றம், தகவல் தொழில்நுட்ப மன்றம், போதைப் பொருள் எதிர்ப்பு மன்றம் உள்ளிட்ட மன்றங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு மாணவர்களின் கல்வி இணை செயல்பாடுகளில் சிறந்து விளங்கி வருகிறார்கள். கலைத் திருவிழாவில் கலந்து கொண்டு மாணவர்கள் மாவட்ட அளவில் தேர்வு பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தும் அறிவியல் சார்ந்த அனைத்து நிகழ்வுகளிலும் மாணவர்கள் பங்கெடுத்து வருகிறார்கள் துளிர் திறனறிவுத் தேர்வு அறிவியல் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தலில் மாநில அளவில் முதலிடம் பெற்று சிறப்பித்துள்ளார்கள்.
துளிர் திறனறிவுத் தேர்வில் முதலிடம் பெற்று கல்வி சுற்றுலா சென்று உள்ளனர். அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் விதமாக வானவில் மன்றத்தின் செயல்பாடுகள் மாதம் தோறும் செயல்படுத்தப்பட்டு மாணவர்கள் அறிவியல் சிந்தனை மேம்பட்டு வருகிறது. கணித திறனிலும் சிறந்து விளங்கி வருகிறார்கள். போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் பங்கு கொள்வதற்காக அறிவியல் ஒளி தேர்வு அறிவியல் மனப்பான்மை வளர்ப்பதற்கான விஞ்ஞானம் பிரதான் தேர்வு ஆண்டுதோறும் பள்ளியில் நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் பங்கு கொண்டு வெற்றி பெற்று வருகிறார்கள். தேசிய வருவாய் வழி திறன் படிப்புக்கான உதவித்தொகை தேர்வில் இப்பள்ளியிலிருந்து நான்குக்கு மேற்பட்ட மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் தேசிய வருவாய் வழி திறன் படிப்புக்கான தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அனைத்து மாணவர்களும் கணினி அறிவினை மேம்படுத்துவதற்காக உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் மூலம் கணினி சார்ந்த பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது .
நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஸ்மார்ட் வகுப்பறைகள் மூலம் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டு வருகிறது. அனைத்து வகுப்புகளிலும் எல்இடி டிவிகள் மூலம் மாணவர்களுக்கு தேவையான கற்றல் கற்பித்தல் சிறப்பான பணி நடைபெற்று வருகிறது. காலை உணவு திட்டத்தில் அனைத்து மாணவர்களும் சிறப்பாக பலனடைந்து வருகிறார்கள். பள்ளி நூலகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களுடன் மாணவர்களின் வாசிப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
தினசரி நாளிதழ்களும் மாணவர்கள் வாசித்து வருகிறார்கள். சிறந்த உள் கட்டமைப்பு வசதிகள், தரமான குடிநீர், சுகாதாரமான கழிப்பறை, சுற்றுப்புறத் தூய்மை, உள்ளிட்டவை சிறப்பாக பராமரிக்கப்பட்டு மாணவ, மாணவிகளின் கல்வித்திறன் மேம்பட்டு வருகிறது. சிறந்த பள்ளிக்கான பேராசிரியர் அன்பழகன் விருதினை பெற்ற தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி ஆசிரியர்கள் கணித பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை, அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா, ஆங்கில பட்டதாரி ஆசிரியர் சிந்தியா, இடைநிலை ஆசிரியர்கள் நிவின், வெள்ளைச்சாமி, ஜெம்ம ராகினி சகாய ஹில்டா, செல்வி ஜாய், கணினி உதவியாளர் தையல்நாயகி, மழலையர் ஆசிரியை கௌரி, சத்துணவு அமைப்பாளர் லதா, சத்துணவு உதவியாளர், காலை உணவு திட்ட பணியாளர்கள் நந்தினி, தனலெட்சுமி உள்ளிட்ட அனைத்து ஆசிரிய பெருமக்களையும் பள்ளிக் கல்வித் துறையின் உயர் அலுவலர்கள், பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம், பொதுமக்கள், ஆசிரியர் பெருமக்கள், கல்வியாளர்கள் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் வாழ்த்தி பாராட்டு தெரிவித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஈசா.
Comments