கோவில்பட்டியில் 150 அடி நீள தேசியக் கொடியுடன் ஊர்வலம் மேறக்கொண்ட பாஜகவினர்!!
சுதந்திர தின விழா மற்றும் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் வகையில் கோவில்பட்டியில் பாஜக சார்பில் தேசியக் கொடி ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோவில்பட்டி லெட்சுமி மில் மேம்பாலம் அருகே தொடங்கிய ஊர்வலம் மெயின் ரோடு, மாதங்கோவில் சாலை, எட்டயபுரம் சாலை வழியாக கோவில்பட்டி காந்தி மைதானத்தில் நிறைவு பெற்றது. இந்த ஊர்வலத்தில் சுமார் 150 அடி நீள தேசியக் கொடியுடன் பாஜகவினர் ஊர்வலம் மேறக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவில்பட்டி செய்தியாளர்
-ராஜ்குமார்.
Comments