ஸ்டேன்ஸ் பள்ளியின் 163 வது ஆண்டு விழா! - பள்ளியின் 2024-25 ஆம் ஆண்டுக்கான சிறப்பு மலர் வெளியீடு!!

கோவையில் ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியின் 163 வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

கோவையில் நூற்றாண்டுகளை கடந்த  பள்ளியாக அவினாசி சாலையில் உள்ள ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன்  செயல் பட்டு வருகின்றது.

கோவையின் முக்கிய பகுதியில் செயல்பட்டு வரும்,  பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ள ஸ்டேன்ஸ் பள்ளியின் 163 வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியின் தாளாளர் பிலிப் ஆர்.ஜே. ஃபாவ்லர் தலைமையில் நடைபெற்ற விழாவில் பள்ளியின் முதல்வர் ஜான் ஸ்டீபன் விழாவிற்கு வந்த அனைவரையும் வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஸ்வர்கா பவுண்டேஷன் நிறுவனர் ஸ்வர்ணலதா கலந்து கொண்டு மாணவர்களிடையே விடா முயற்சி,தன்னம்பிக்கையால் எதையும் சாதிக்க முடியும் என கூறினார்.

நிகழ்ச்சியில் கவுரவ அழைப்பாளராக ஸ்டேன்ஸ் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவரும்,இந்திய கிரிக்கெட் வீர்ரும் ஆன மருத்துவர் ஜெயகுமார் கலந்து கொண்டு, பள்ளியில் பயின்ற போது தம்முடைய அனுபவங்களை கூறி நினைவு கூர்ந்தார்.

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளியில் சிறந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள்  மற்றும் கலை நிகழ்ச்சிகள்,விளையாட்டுகளில் சிறந்து செயல்பட்ட மாணவ,மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள்  வழங்கி கவுரவிக்கப்பட்டது.

பின்னர் ஸ்டேன்ஸ் பள்ளியின் 2024-25 ஆம் ஆண்டுக்கான சிறப்பு மலர் வெளியீடு செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில் ஸ்டேன்ஸ் பள்ளி நிர்வாகிகள்,ஆசிரியர்கள்,மாணவ,மாணவிகள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி, போத்தனூர்.

Comments