இண்டோஸ்டேட்ஸ் ஹெல்த் “வருமுன் காக்கும் மருத்துவ மையம்” துவக்கம் மற்றும் செயலி அறிமுகம் செய்யப்பட்டது!!

கோவை: சுதந்திர தினத்தை முன்னிட்டு இண்டோஸ்டேட்ஸ் ஹெல்த் அரசூரில் வருமுன் காக்கும் மருத்துவ மையத்தை தொடங்கியது. Indo States Health App என்ற புதிய டிஜிட்டல் செயலியையும் அறிமுகப்படுத்தி உள்ளது. இது ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) ஆதரவு செயலி ஆகும். இந்த செயலி மருத்துவ ஆலோசனைகள், நேரம் பதிவு, பரிசோதனை முடிவுகள் மற்றும் நினைவூட்டல்களை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

துவக்கவிழாவில் இதுகுறித்து உரையாற்றிய இண்டோஸ்டேட்ஸ் ஹெல்த் மருத்துவ மையத்தின் நிறுவனர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் ராஜேஷ் ரங்கசாமி,  “இந்த விடுதலை நாளில், மக்கள் உடல்நல விடுதலையை உணர வேண்டும் — விழிப்புணர்வு, தொழில்நுட்பம் மற்றும் முன்கூட்டியே நோய் கண்டறிதல் என்பது ஆரோக்கியமான  எதிர்காலத்துக்கு வழி,” என்று கூறினார்.

வருமுன் காக்கும் மருத்துவம், நோய்கள் உருவாகும் முன்பே அவற்றை கண்டறிந்து தடுக்கிறது என்றும்

வரும் முன் காக்கும் மருத்துவ வசதிகள் அனைத்தையும் இண்டோஸ்டேட்ஸ் ஹெல்த் ஒரே கூரையின் கீழ் அளிக்கிறது என்றார். 

இதில் 128-slice CT மற்றும் 1.5 Tesla MRI, 3D மேமோகிராஃபி மற்றும் DEXA ஸ்கேன், 

முழுமையான ரத்தம் மற்றும் உடல் பரிசோதனைகள் ஆகியவை அடங்கும் என்றார்.

இந்நிகழ்வில் இண்டோஸ்டேட்ஸ் நிறுவனர்கள் டாக்டர் ராஜேஷ் ரங்கசாமி மற்றும் டாக்டர் நித்யா மோகன் அவர்களும் அரசூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் திரு. கோவிந்தராஜ், டாக்டர் வாணி மோகன், டாக்டர் மோகன், முதன்மை மருத்துவ அதிகாரி டாக்டர் லோகேஷ்,  மையத்தின் மேலாளர் திரு. அய்யப்பன் ஆகியோர் துவக்க விழாவில் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி, போத்தனூர்.


Comments