கோவை தெற்கு பகுதியில் சுதந்திர தினக் கொண்டாட்டம் – நாட்டுப்பற்று உணர்வை ஊட்டிய ஸ்டார் புரமோட்டர்ஸ் 𝗣.வெங்கடேசன்!!


கோவை தெற்கு போத்தனூர் செட்டிபாளையம் ஈஸ்வரன் நகர் பேருந்து நிறுத்தம் அருகே ஸ்டார் புரமோட்டர்ஸ் அலுவலகம் முன்பு 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடி ஏற்றும் விழா சிறப்பாக நடைபெற்றது.


நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நிகழ்ச்சியில், ஸ்டார் புரமோட்டர்ஸ் நிறுவனத்தின் P. வெங்கடேசன் அவர்கள் காலை நேரத்தில் தேசியக் கொடியை ஏற்றி தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்தினார். விழாவில் பங்கேற்ற அனைவரும் கொடியேற்ற நிகழ்வின் போது கைத்தட்டி வாழ்த்தி நாட்டுப்பற்று உணர்வை வெளிப்படுத்தினர்.



பின்னர் சிறப்புரையாற்றிய ஸ்டார் P. வெங்கடேசன் அவர்கள் நமது நாட்டின் வளர்ச்சிக்காக வெளிநாட்டு பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இது நம் பொருளாதார வளர்ச்சிக்கும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்கும் வழிவகுக்கும் எனக் குறிப்பிட்டார் மேலும் நாட்டின் சுதந்திரத்தைப் பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை என்றும் ஒற்றுமையுடன் செயல்படும்போது மட்டுமே நாடு முன்னேறும் என்றும் வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள், ஸ்டார் புரமோட்டர்ஸ் நிறுவனத்தின் குடும்ப உறவுகள் மற்றும் பொதுமக்கள், சிறுவர்கள் உள்ளிட்டோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். விழாவின் இறுதியில், கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு அனைவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கள் தெரிவித்து சுதந்திர தினத்தை சிறப்பாகக் கொண்டாடினர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-M.சுரேஷ்குமார்.

Comments