கோயம்புத்தூர் சூப்பர் ஸ்மாஷர்ஸ் நடத்தும் தமிழகத்தின் முதல் 'பிக்கிள் பால் உலக தரவரிசை' போட்டிகள் கோவையில் தொடக்கம்!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் ஐ.ஏ.எஸ். அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள உள்ளார். எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர், செய்தியாளர்களிடம் இந்த நிகழ்வு பற்றி பேசவுள்ளார்.
இப்போட்டிகள் 10 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, திறன் மற்றும் வயது அடிப்படையிலான பிரிவுகளில் நடைபெறும். இந்தியாவில் பிக்கிள் பால் விளையாட்டின் முக்கிய வீரர்களில் சிலரும் இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக இருப்பார்கள். சென்னை வீரர்கள் சரவணன், வெங்கடேஷ், ஜெய்ஷ்னு, அனீஷ் மற்றும் விஸ்வஜித், பெங்களூர் வீரர்கள் கௌதம், ரஞ்சித், ஸ்பேடன் மற்றும் ஆதித்யா பிரதீப் ஆகியோருடன், கொல்கத்தாவைச் சேர்ந்த வினய் சேத்தியா ஆகியோர் கலந்து கொள்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த முக்கிய வீரர்களுடன் கோயம்புத்தூரைச் சேர்ந்த பூபதி மற்றும் ரித்திகா ஆகியோரும் இணைந்து களம் காணவுள்ளனர்.
மொத்தப் பரிசுத் தொகை ரூ.4 லட்சம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்துடன் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்களும் பரிசாக வழங்கப்பட உள்ளன. இப்போட்டிகளை ஃ பேன்கோட் (FanCode) எனும் OTT தளத்திலும் யூடியூப் (YouTube) தளத்திலும் நேரலையாகவும் காணமுடியும். இப்போட்டிகள் இந்திய பிக்கிள் பால் சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், திறந்தநிலை பிரிவுகளுக்கான பி.டபிள்யு.ஆர். தரவரிசை இணக்கத்தை உறுதி செய்வதற்காக, சங்கத்தின் அதிகாரிகள் இப்போட்டிகளை மேற்பார்வையிடுவார்கள்.
இது ஒரு டைனமிக் யுனிவர்சல் பிக்கிள் பால் ரேட்டிங் (DUPR) அமைப்பு-தரவரிசைப்படுத்தப்பட்ட பிக்கிள் பால் போட்டியாகவும் இருக்கும். எனவே இப்போட்டியில் வீரர்களின் திறன் மற்றும் சாதனைகள் DUPRன் கீழ் அளவிடப்பட்டு மதிப்பிடப்படும். இந்தியாவில் பிக்கிள் பால் போட்டி மிக வேகமாக வளர்ந்து வரும் நேரத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது. கிறது.
உலக பிக்கிள் பால் லீக் ஏற்கனவே முக்கிய நகரங்களை பிரதிநிதித்துவப்படுத்திய அணிகளுடன் நடைபெறுகிறது. குளோபல் ஸ்போர்ட்ஸ் பிக்கிள் பால் லீக்கில் மும்பை சத்ரபதி வாரியர்ஸ் போன்ற அணிகள் இடம்பெற்றுள்ளன. இப்போட்டியின் தொடக்க நாளில், கோவை சூப்பர் ஸ்மாஷர்ஸ் தங்கள் உரிமையாளர் அணியை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிக்கிள் பால்; இது டென்னிஸ், பேட்மிண்டன் மற்றும் டேபிள் டென்னிஸ் விளையாட்டுகளின் கலவையான விளையாட்டு. இது 1965ம் ஆண்டு அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட மிகவும் பழமையான விளையாட்டு. மேலும் இது கொரோனா காலத்திற்கு பிறகு உலகம் முழுவதும் மிகவும் பிரபலமடைந்தது. இந்தியாவில் 50,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் தற்போது பிக்கிள் பால் விளையாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி, போத்தனூர்.
Comments