சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினி ரசிகர்களுடன் கேக் வெட்டிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது.கோவில்பட்டி SBT சினிமாஸ் திரையரங்கில் கூலி திரைப்படம் வெளியாகி உள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சினிமா துறையில் 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதை தொடர்ந்தும், கூலி திரைப்படம் வெளியானதை முன்னிட்டு முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ திரையரங்கு முன்பு ரஜினி ரசிகர்களுடன் கேக் வெட்டிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.


இதில்,இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்டச் செயலாளர் M.R.V. கவியரசன் உடனிருந்தார்.



நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவில்பட்டி செய்தியாளர்

 -ராஜ்குமார்.

Comments